காமடி நடிகருக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன்.
இப்படத்தினை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.
பின் ஆள் அடையாளமே தெரியாமல் போனார். படிப்பை தொடர ஆரம்பித்து பின் புலிகுத்தி பாண்டியன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். அதன்பின் மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது யோகிபாபுவுக்கு மனைவியாக நடிக்கும் மலை படம் பல ஆண்டுகளாக உருவாகி கொண்டு வருகிறது. அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
(Visited 17 times, 1 visits today)