‘கேஜிஎஃப்’ புகழ் ‘சாச்சா’ உயிரிழந்தார்
‘கேஜிஎஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 52 ஆவது வயதில் இன்று காலமானார்.
இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் ‘சாச்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் ஹரிஷ் ராய்.
இந்த நிலையில், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் மெலிந்த நிலையில், தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது, ஒரு ஊசிக்கு மட்டும் ரூ.3.55 லட்சம் செலவாகிறதாம்.
ஒரு நாளைக்கு 3 ஊசிகள் செலுத்த வேண்டும். இப்படி 63 நாட்களுக்கு ஊசி போட மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும், தன்னிடம் போதுமான பண வசதி இல்லை என்றும் ஹரிஷ் ராய் கூறியிருந்தார்.
மொத்தமாக மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் ரூ.70 லட்சம் செலவான நிலையில், பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்தார்.
எனினும், 4-வது ஸ்டேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹரிஷ் ராய் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். 52 வயதான அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






