செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து விலகும் முக்கிய நியூசிலாந்து வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் வருகிற 24ந்தேதி மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் இந்த டெஸ்டிலும் ஆட மாட்டார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களுருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆட வில்லை.

இடுப்பு வலியில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் வில்லியம்சன் 2வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை. அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும், 3வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 1ந் தேதி மும்பையில் தொடங்குகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!