மீனவப் பெண்களுடன் தங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷ்!! திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
பன்மொழி நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைரன்’ தவிர, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகு தாத்தா’ மற்றும் ‘கன்னிவெடி’ ஆகிய படங்கள் தமிழில் வரவிருக்கும் நீண்ட வரிசை படங்களாக உள்ளன. மேலும் இவை பெண்களை மையமாகக் கொண்டவை.

இப்போது லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால், நாக சைதன்யாவுடன் சந்து மொண்டேடி இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

30 வயது கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் மீனவப் பெண்ணாக நடிக்கிறார்.

மீனவப் பெண்களுடன் ஒரு வாரம் தங்கி அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களைக் கவனிக்க அவர் முடிவு செய்திருப்பது சிறப்பம்சமாகும்.

(Visited 10 times, 1 visits today)





