கீர்த்தி சுரேஷ் நிராகரித்த 700 கோடி வசூல் படம்

தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு சென்றார். இவருடைய முதல் ஹிந்தி படம் இது என்பதால் எதிர்பார்ப்பு பெரிதளவில் இருந்தது.
ஆனால், படம் படுதோல்வியடைந்தது. பல கோடி நஷ்டம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், மாபெரும் ஹிட்டான சாவா திரைப்படத்தை நிராகரித்துள்ளார்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் தான் சாவா. இப்படத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம். ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டார் என்றும், அந்த சமயத்தில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது