திடீரென பிக் பாஸ் வீட்டுக்குள் கீர்த்தி சுரேஷ்…
இப்போது எல்லாம் ஒரு படம் ஹிட் ஆக வேண்டும் என்றால் படத்தில் நடித்தவர்கள் உட்பட அனைவரும் பாடுபட்டு புரொமோஷன் செய்கின்றார்கள்.
அந்த வகையில், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது,

இதற்கு ப்ரமோஷன் செய்ய பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார் நம்ம கீர்த்தி. இரவில் திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருவதால் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி சீருடைகள் இருந்தனர். அவர்களிடம் கலந்துரையாடிய கீர்த்தி சுரேஷ் உங்கள் அனைவருக்கும் வெளியே நிறைய ரசிகர்கள் இருப்பதாக கூறினார்.

அதுமட்டுமின்றி தான் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நவம்பர் 28ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கு ஆதரவளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கார்டன் ஏரியாவில் போட்டியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து டான்ஸ் ஆடிவிட்டு வெளியே சென்றார் கீர்த்தி சுரேஷ்.






