பிரியங்காவிற்கு பதிலாக வந்த சீரியல் நடிகை…

சமீபத்தில் வந்த தகவலின் படி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் சேனல் வாங்கியதாகவும், இன்னும் கூடிய விரைவில் விஜய் டிவி சேனல் கை மாறுவது போல் தகவல் வெளிவந்தது. அதனால் சில தொகுப்பாளர்களுக்கு இடமில்லை என்ற செய்திகள் வந்து நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு தற்காலிகமாக பிரியங்கா ஒதுங்கி இருக்கிறார்.
இதற்கு காரணம் பிரியங்காவின் கல்யாணம் மற்றும் தோழியின் பாவனி கல்யாணத்தில் பிஸியாகவும் இருப்பதால் இப்போதைக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவால் தொகுத்து வழங்க முடியாது.
அதனால் இந்த வாரம் முதல், பிரியங்காவிற்கு பதிலாக தொகுப்பாளனியாக வந்திருக்கும் கதாநாயகி யார் என்றால் மகாநதி சீரியலில் காவிரி ஆக அனைவரது மனதையும் கொள்ளையடித்த லட்சுமி பிரியா.
இவருக்கு சின்ன திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் விகா பேன்ஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்கள் மனதை வென்று விட்டார்.
தற்போது முதல் முறையாக தொகுப்பாளனியாக புது அவதாரத்தை எடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வந்து விட்டார்.
லட்சுமி பிரியாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட விஜய் டிவி அவர் மூலமாக விட்ட இடத்தை பிடிப்பதற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது.