தமிழ் சினிமாவில் தரமான சம்பவம் லோடிங்… என்ன தெரியுமா?
 
																																		கமல் ஹாசன் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
அதனையடுத்து இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் கமல் ஹாசன்.

தக் லைஃப் படத்தின் இன்ட்ரோ வீடியோ அன்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.

இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா.
இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். இந்த சூழலில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக தொடங்கிவிடும் என்று தகவல்கள் வெளியாகி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் இதுவரை கமிட்டாகியிருக்கின்றனர். இந்நிலையி படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும், திரிஷா ஜெயம் ரவி அல்லது துல்கர் சல்மானுக்கு ஜோடியாகலாம் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
ஒருவேளை ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மையென்றால் கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
        



 
                         
                            
