கமலுடன் முத்தக்காட்சி சர்ச்சை… அபிராமி கொடுத்த தக் லைஃப் பதில்..

இந்தியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் தக் லைஃப் படக்குழுவினர் பற்றிதான். கமல் ஹாசன் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாஅவில் தமிழில் இருந்து தான் கன்னடம் என பேசியது பலரது கண்டனத்தையும் விமர்சனத்தையும் பெற்றது.
இதனை தொடர்ந்து தக் லைஃப் படத்தில் தன்னைவிட 30 வயது குறைவான நடிகை அபிராமியுடன் முத்தக்காட்சியில் நடித்தது மேலும் ஒரு சர்ச்சைக்கு காரணம். கமலும் அபிராமியும் முத்தக்காட்சியில் நடித்துள்ளது இது இரண்டாம் முறையாகும்.
ஏற்கனவே விருமாண்டி படத்தில் நெருக்கமாக நடித்தும் இருந்தனர். 21 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து தக் லைஃப் படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகை அபிராமி அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய உண்மையான பெயர் திவ்யா என்றும் குணா படத்தில் கமல் அபிராமி என்கிற பெயரை அதிகம் பயன்படுத்தியதால் அந்த பெயரையே தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டதாகவும் அபிராமி தெரிவித்துள்ளார்.
மேலும் முத்தக்காட்சி பற்றி பேசிய அபிராமி, அது 3 செகண்ட் கிஸ் சீன் தான். அது டிரைலரில் இடம்பெற்றது தான் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அது அந்த காட்சிக்கு தேவையானது தான் என்பது படத்தை பார்க்கும் போது தெரியும். ஆனால் அதைப்பற்றி இந்தளவு பேசுவது தேவையில்லாதது.
வேறு எந்த நடிகரும் முத்தக்காட்சியில் நடித்ததில்லையா? உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப்பற்றி பேசத்துவங்கிவிடுகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று அபிராமி தெரிவித்துள்ளார்.