பான் இந்தியா படமாக உருவாகும் தைதி 2 – லோகேஷ் சம்பவம் லோடிங்

லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் உருவாகி இருக்கும் கூலி படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் அடுத்ததாக லோகேஷ் கார்த்தியின் கைதி 2 படத்தை தான் எடுக்க இருக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.
எனவே ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக தான் கைதி 2வை லோகேஷ் எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
இந்த படமும் எல்சியூவில் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் கமல், சூர்யா போன்ற பிரபலங்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.
தன்னை வளர்த்து விட்ட கார்த்தியின் மார்க்கெட்டை பெரிதாக வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்.
சமீபகாலமாக கார்த்தி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகிறார்.
அவருக்கு ஒரு பிரேக் பாய்ண்டாக கைதி 2 படம் இருக்கும். கார்த்தி இந்த படத்திற்காக இப்போது ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறாராம். ஆகையால் வேற லெவலில் இந்த படம் உருவாகும் என்பது எந்த சந்தேகமும் இல்லை.