“ஆறுமுகன் ஆளும் மண்ணில் வாழும் தமிழன் நான்” வாகீசனின் புதிய பாடல்…
சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்படுகின்ற ஒரு விடயம்தான் இலங்கை ராப் பாடகர் ஆன வாகீசனின் பாடல்கள்.
தற்போது டூ கே கிட்ஸ் கொண்டாடும் ராப் பாடகராக இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாகீசன் காணப்படுகின்றார்.
இதுவரை ராப் பாடல்களில் பட்டையை கிளப்பிய வாகீசன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
இவர் “காக்கும் வடிவேல்” என்ற புதிய பாடலை ராப் மற்றும் பக்தியை கலந்து பாடியுள்ளார்.
ஆனால் கடவுள் பாடலானாலும் இவரது கூர்மையான வார்த்தைகள், ஒவ்வொரு வரிகளிலும் பக்தி பரவசமாக பொங்கி எழுகின்றது.
வாகீசன், தரன் குமார் மற்றும் Kripakarjay J ஆகியோர் இணைந்து இப்பாடலை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.





