மாசம் ஆறு இலட்சம்…! ரங்கராஜ் தலையில் விழுந்த இடி
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா தற்போது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாத செலவுக்கு பணம் தர வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ்க்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்து வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், தற்போது இந்த வழக்கையும் பதிவு செய்துள்ளார்.
தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.






