பொழுதுபோக்கு

மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி… ஜவான் ரிலீஸ் திகதி அறிவிப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என இந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அட்லி இந்த படத்தின் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

விஜய் சேதுபதி, ஹிந்தியில் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இதன் பிறகு இவருக்கு இந்தி சினிமா உலகில் மிகப்பெரிய வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று திருமணத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு ஜவான் ரிலீசுக்கு பிறகு, பாலிவுட்டில் பெரிய ஓபனிங் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என ஷாருக்கான் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி ஏந்தி இருக்கும் ஷாருக்கானின் போஸ்டர் ரிலீஸ் தேதியோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

 

https://twitter.com/iamsrk/status/1688483556417515520

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்