பொழுதுபோக்கு

உலகளவில் ‘ஜவான்’ படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா?

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில்,  அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் வசூலும் குவிந்தது.

https://twitter.com/boxofficesquare/status/1702215482781372872

இந்த படம் ஒரே நாளில் 129 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் நான்கு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்த நிலையில்   ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் ஒரு வார வசூல் ரூ.660.03 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் ரூ.1000 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் அட்லி மற்றும் ஷாருக்கானுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/RedChilliesEnt/status/1702257357609468038?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1702257357609468038%7Ctwgr%5Ef2411588f785845310088e3123a0ba553b2f5621%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fshahrukkhan-in-jawaan-one-week-collection-details-nayanthara-atlee-aniruth-tamilfont-news-342902

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!