அதிதியுடன் திருமணமா? உறுதி செய்தார் சித்தார்த்…

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில், திடீர் திருமணம் செய்துக் கொண்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என பதிவிட்டுள்ளார்.
அதிதியும் இதேபோல பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இருவரும் நிச்சயத்தின் போது மாற்றிக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தமது நிச்சய செய்தியை அறிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)