தமிழ்நாடு

ஐடி பெண் ஊழியர் எரித்து படுகொலை… முன்னாள் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னையில் மென்பொறியாளர் பெண் ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யபட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை நிராகரித்துவிட்டு, வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரத்தில் காதலியை கொலை செய்ததாக, முன்னாள் காதலன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை கால்கள் கட்டபட்டு எரித்து கொல்லபட்ட நிலையில், அதனை பொலிஸார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரிய வந்ததது,

இந்த கொலை தொடர்பாக நந்தினியின் முன்னாள் காதலரான வெற்றி (28)என்பவரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது, மதுரையில் கல்லூரி படிக்கும் போதிலிருந்து நந்தினியை ஐந்து வருடமாக காதலித்து வந்தேன். எனக்கு தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் இருந்ததை அறிந்த நந்தினி என்னை திருநங்கை எனக் கூறி நிராகரித்து விட்டார். ஆனால் நண்பர்களாக இருப்போம் என்ற அடிப்படையில் நந்தினியுடன் அதன் பிறகு பழகி வந்தேன்.

என்னை வெறுத்த நந்தினி ராகுல் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார். ராகுல் உடனான காதலை துண்டித்துக் கொள்ளுமாறு நந்தினியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். அதனை நந்தினி பொருட்படுத்தவில்லை.இதனால் அவரை கொலை செய்வதென்று முடிவெடுத்தேன். நேற்று நந்தினி பிறந்தநாள் என்பதால் கோயிலுக்கு நந்தினியுடன் சென்றுவிட்டு, ஆதரவற்ற இல்லத்தில் உணவு வழங்கினோம். பின்னர் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக கூறி தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்க்கு அழைத்து சென்றேன்.

அங்கு சங்கிலியால் கைகால்களை கட்டிய பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். வலி தாங்க முடியாது நந்தினி கத்தியதால், கையோடு எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன்” என்று வாக்குமூலம் தந்துள்ளார்.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!