கடவுளின் உதவியுடன் பணயக்கைதிகளை அழைத்து வருவோம் – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை

கடவுளின் உதவியுடன் காசாவில் சிக்கியுள்ள பணய கைதிகளை அழைத்து வருவோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட பணய கைதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்த தகவலை இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தை அங்கீகரிக்க நாளை தனது அமைச்சரவையைக் கூட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகளை திரும்பப் பெறுவது மற்றும் கைதிகள்-பணயக்கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்றும் ஹமாஸ் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு ட்ரம்ப் மற்றும் மத்தியஸ்த நாடுகளிடம் ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.