ஈரான் மீது 15,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குண்டு தாக்குதல்கள்
கடந்த மாதம் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது 15,000 க்கும் மேற்பட்ட குண்டு தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடம் நடந்த 12 நாள் போரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
மேலும், ஈரான் மற்றும் லெபனானில் புதிய தாக்குதல் இலக்குகளுக்கும் இஸ்ரேல் அனுமதியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





