இஸ்ரேல்- ஹமாஸ் போர் : பணய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த கத்தார் பிரதமர்
கத்தார் மற்றும் எகிப்து மூலம் இஸ்ரேலுடன் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஹமாஸ் விலகி விட்டது.
இப்பின்னணியில், கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அவர்களிடம், “பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது” என அல் தனி தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)