உலகம் செய்தி

“மக்களைவிட பயங்கரவாதக் குழுக்களே ஈரான் அரசுக்கு முக்கியம்”

ஈரான் அரசு தனது நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு, பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்க்கோ ரூபியோ Marco Rubio
விமர்சித்துள்ளார்.

ஈரான் தமது பொருளாதாரம் மற்றும் நீர் மேலாண்மையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்காக தனது செல்வத்தைச் செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சரியான நேரத்தில் தகுந்த தூதரக முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், தற்போது நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம் எனவும் Marco Rubio சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய மக்கள் மிகுந்த ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும், அந்நாட்டு அரசாங்கத்தின் தவறான முன்னுரிமைகளே தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!