விஜய்யின் கட்சியில் இணைந்தாரா வெற்றிமாறன்?
மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.
இதை கண்ட பலரும் அவர் விஜய் கட்சியில் இணைந்துவிட்டாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தவெகவின் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவருக்கு ராட்சத மாலை அணிவித்து தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நிகழ்ச்சியில் மட்டுமே வெற்றிமாறன் கலந்துகொண்டதாகவும், கட்சியில் இணையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.