பிரியங்கா கர்ப்பமா? பயில்வான் கொடுத்த ஷாக்..

விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும், சிலர் ஏன் திடீர் திருமணம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பிரியங்கா – வசி திருமணத்திற்கு, விஜய் டிவி பிரபலங்கள், அமீர், பாவ்னி ரெட்டி, நிரூப், அன்ஷிதா, மதுமிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாள பயில்வான் அளித்த பேட்டியொன்றில், பிரியங்கா திருமணத்திற்கு 50 முதல் 60 பேர்வரை தான் வந்திருப்பார்கள். இந்த அவசர திருமணத்திற்கு என்ன காரணமாக இருக்கும், என ஒரு வீடியோவை போட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது, அதனால் தான் திருமணம் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் இந்த இரண்டாவது திருமணத்துக்கு முன் பிரியங்கா கர்ப்பமாகிவிட்டாரா? அதனால் தான் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டாரோ என்ற கேள்வி எழத்தானே செய்கிறது என்று பயில்வான் பேசியுள்ளார்.