பொழுதுபோக்கு

அம்மாடி… ஒரு வழியா முடிஞ்சிது… இந்தியன் 2 நியூ அப்டேட்

ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கியது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக மூவர் இறந்தனர். கமல் ஹாசன் நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் படப்பிடிப்பு நின்றது.

இதன்பின் சில பண பிரச்சனை காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்காமல் இருந்து வந்தது. இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இந்தியன் 2 படத்தை சுற்றி இருந்தது.

ஆனால், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்தியன் 2 படத்தை கைப்பற்றிய பின், ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஒரு வழியாக முடிந்துவிட்டது. ஆம், கடந்த சில நாட்களுக்கு முன் தான் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளனர்.

கமல் ஹாசன் பிறந்தநாள் அன்று எப்படி இந்தியன் 2 படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்ததோ அதே போல் வருகிற நாட்களில் இந்தியன் 2 படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை வருகிற ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறார்களாம்.

அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content