இந்தியன் 2 மோசமான விமர்சனம்… ஷங்கர் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நேற்று திரைக்கு வந்தது.
சுமாரான விமர்சனங்கள் தான் படத்திற்கு கிடைத்து வருகிறது என்பதால் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியன் 2 படத்தின் நீளம் 3 மணி நேரம் இருப்பதை பலரும் விமர்சனம் செய்து இருக்கின்றனர்.
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பலரும் விமர்சிப்பதால் ஷங்கர் தற்போது 20 நிமிடங்கள் குறைக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டால் படம் இன்னும் விறுவிறுப்பாக மாறும் என எதிர்பார்க்கலாம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 31 times, 1 visits today)