விளையாட்டு

இந்திய அணி புதிய சாதனை!

T-20 World Cup – உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா India படைத்துள்ளது.

நமீபியா Namibia அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6.5 ஓவர்களில் இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.

இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவர்களில் 100 ஓட்டங்களை குவித்ததே சாதனையாக இருந்தது.

அச்சாதனை இந்திய அணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

T – 20 உலகக் கோப்பைத் தொடரின் 18வது லீக் ஆட்டம் நேற்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா, நமீபியா அணிகள் மோதின.இப்போட்டியில் இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!