போர் விமானங்களில் நவீன ஏவுகணைகளை இணைக்கிறது இந்தியா!
இந்திய விமானப்படையின் மிக்-29 போர் விமானங்களில் MiG-29 fighter நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன.
இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் 15 கி.மீ தூரம் மட்டும் சென்று தாக்கும்.
விமானப் படையில் உள்ள தேஜஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்களில் அதி நவீன அஸ்ராம் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஐரோப்பிய தயாரிப்பான இந்த ஏவுகணைகள் 25 கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
இந்த வகை ஏவுகணைகளை மிக்-29 ரக போர் விமானங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மிக்-29 ரக போர் விமானத்தில் சில மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட மிக்-29 ரக போர் விமானத்தில், பயன்படுத்த அஸ்ராம் ஏவுகணைகளை எபிடிஏ நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.





