திருமலை-புல்மோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத வெடிபொருட்கள்
 
																																		திருமலை-புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெடி பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (07) இடம் பெற்றுள்ளது.
புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரி விஜயகோனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 09 டெடனேட்டர் மற்றும் 09 சேவா நூல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை- ஜின்னாபுரம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.சாதிக் (28வயது) எனவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
 
        



 
                         
                            
