உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக்கொள்கிறேன்….
இயக்குனர் ஓம் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்த படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் சுமார் 700 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
ஆனால் இவ்வளவு பெரிய பொருட்செலவு கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று வசனங்கள், ஒரு இதிகாச திரைப்படத்தில் வரும் வசனங்கள் போல இல்லை என்றும் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மத அமைப்புகளும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் எழுத்தாளர் மனோஜ் சுக்லா தற்பொழுது ஒரு பதிவின் மூலம் தனது தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பின்வருமாறு…
मैं स्वीकार करता हूँ कि फ़िल्म आदिपुरुष से जन भावनायें आहत हुईं हैं.
अपने सभी भाइयों-बहनों, बड़ों, पूज्य साधु-संतों और श्री राम के भक्तों से, मैं हाथ जोड़ कर, बिना शर्त क्षमा माँगता हूँ.
भगवान बजरंग बली हम सब पर कृपा करें, हमें एक और अटूट रहकर अपने पवित्र सनातन और महान देश की…— Manoj Muntashir Shukla (@manojmuntashir) July 8, 2023
எப்போதும் தான் நடிக்கும் கதைகளை மிக நேர்த்தியாக அமைத்துக்கொள்ளும் பிரபாஸ், கடந்த சில ஆண்டுகளாக அதில் சறுக்கல்களை சந்தித்து வருவதாக அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாகுபலி 2 படத்திற்கு பிறகு வெளியான பிரபாஸின் சாகோ, ராதே ஷியாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் பெரிய அளவில் அவருக்கு வெற்றிகளை பெற்று தரவில்லை.
இந்நிலையில் பிரபாஸின் சலார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.