பசி, பட்டினியால் வாடும் காஸா – உலக உணவு அமைப்பு வெளியிட்ட தகவல்
காஸாவில் வாழும் மக்கள் கடுமையான பசி பட்டினியை எதிர்நோக்குவதாக உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்கு உணவும் குடிநீரும் இல்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அந்த அமைப்பு தெரிவித்தது. எரிபொருள் பற்றாக்குறை நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக அது குறிப்பிட்டது.
மனிதாபிமான அமைப்புகள் எரிபொருளைக் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது.
போரில் ஒரு தரப்பு மட்டும் பாதுகாப்பு வட்டாரங்களை அமைப்பது குறித்து பல்வேறு ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புகளும் ஏனைய நிவாரணக் குழுக்களும் கவலை தெரிவித்தன.
அத்தகைய வட்டாரங்களை அமைப்பதில் பங்கேற்க அவை மறுத்துவிட்டன.
அந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடும், பெரிய அளவில் உயிர்ப்பலி ஏற்படக்கூடும் என்று அமைப்புகள் சொல்கின்றன.
(Visited 16 times, 1 visits today)





