பொழுதுபோக்கு

செம்ம இழுவை… ‘குபேரா’ படம் பற்றி வெளியாகும் தகவல்கள்

மூன்று முறை ரிலீஸ் டேட் அறிவித்து பின் மாற்றப்பட்ட குபேரா படம் இன்று ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் வரவேற்றார்களா என்பதை பார்ப்போம்.

நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் நடிப்பில் மாறி மாறி போட்டி போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இவர் அவரை மிஞ்சுகிறார் அவர் இவரை மிஞ்சுகிறார்.

நடிப்பை பொறுத்தவரை இரு ஹீரோக்களும் குறை வைக்கவில்லை என்றே சொல்லலாம். ஆனால் திரைக்கதை எப்படி இருக்கிறது என்பதுதான் படத்தை தீர்மானிக்கும்.

இயற்கை வளத்தை சுரண்டுகின்ற கார்ப்பரேட் நிறுவனம் ஒரு லட்சம் கோடி லஞ்சம் கொடுக்க திட்டம் போடுகிறது. அதற்காக நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து பினாமி என்ற பெயரில் அவர்கள் மூலமாக இந்த பணத்தை பரிவர்த்தனை செய்ய முயற்சி செய்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் முதல் பாகம் செல்கிறது.

மொத்தமாய் படம் 3 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடுகிறது. முதல் பாதியை விறுவிறுப்பாக கொடுத்தவர்கள் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விட்டார்கள். படத்தின் நீளம் தான் பாதிப்பாக அமைந்துள்ளது.

ஒரே கதாபாத்திரத்தை காட்டுவதால் இரண்டாம் பாதி சலிப்பு தட்டுகிறது. பாதி காட்சிகளில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் ஞாபகம் வருகிறது.

பெரிய ஆர்டிஸ்ட்கள் கையில் இருந்தும் இயக்குனர் சற்று கோட்டை விட்டுவிட்டார். ராஸ்மிகா மந்தனாவை சரியாக பயன்படுத்தவில்லை. மற்றொரு பிளஸ் பாயிண்ட் ஆக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்களை கட்டி போடுகிறது, தனுஷின் நடிப்புக்காக படம் பார்க்கலாம், மொத்தத்தில் சேகர் கம்லா தெலுங்கு பக்கம் தான் மாஸ் தமிழில் தவறிவிட்டார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content