இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

அதிரடியாக கைது செய்யப்பட்ட மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ

  • February 19, 2026
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், பொது அலுவலகத்தில் முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நோர்போக் மாநிலம் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸார் அவரை கைது செய்தனர். அடையாளம் தெரியாத பொலிஸ் வாகனங்கள் மற்றும் சாதாரண உடையில் வருகை தந்த அதிகாரிகள் அவரது வீட்டின் அருகே இருப்பதையும் புகைப்படங்களில் காண முடிகிறது. முன்னர் பிரித்தானிய வர்த்தக தூதராக பணியாற்றிய ஆண்ட்ரூ, முக்கிய அரசாங்கத் […]

இலங்கை

இலங்கையில் வேகமாக பரவிவரும் ரேபிஸ் நோய் : பூனை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கையில் பூனைகள் மூலம் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள் தெருநாய்களால் அல்ல, மாறாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால்  ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய்,  நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் […]

உலகம் முக்கிய செய்திகள்

விமானிகளை அழைக்கும் கனடா : குடியேற்ற திட்டத்தில் புதிய மாற்றங்கள்!

  • February 19, 2026
  • 0 Comments

குடியேற்ற திட்டங்களில் சில புதிய முன்னுரிமை வகைகளை கனேடிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய   ஆராய்ச்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் விமானப் போக்குவரத்து வரையிலான துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கும், சில இராணுவ ஆட்சேர்ப்புகளைச் சேர்ப்பதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. இந்த திட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) இலக்குகளுக்கு கைக்கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. கனடாவில் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பரவலாகக் குறைத்து, திறமையான தொழிலாளர்கள் மற்றும் அறிஞர்களை ஆட்சேர்ப்பு […]

ஐரோப்பா

பிரித்தானிய தம்பதியருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

  • February 19, 2026
  • 0 Comments

பிரத்தானியாவைச் சேர்ந்த தம்பதியர் ஈரானில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சசெக்ஸைச் சேர்ந்த லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோர்  2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிபார்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். குறித்த தம்பதியர் ஈரான் வழியாக சென்றபோது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தம்பதியர் குறித்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர். […]

விளையாட்டு

வெற்றிக் கனியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

  • February 19, 2026
  • 0 Comments

இத்தாலி Italy அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் West Indies அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ICC T-20 உலகக் கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் C பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் […]

இலங்கை செய்தி

இலங்கை – தென்னாபிரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்!

  • February 19, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் Air Vice Marshal Sampath Thuyacontha, இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவருக்கும் Sandile Edwin Schalk இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (19) நடைபெற்றது. இச்சுமூக சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு நலன்கள் தொடர்பான துறைகளில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பாதுகாப்பு செயலாளர், இலங்கை […]

உலகம்

கலிபோர்னியா பனிச்சரிவு – மாயமான 08 பேரின் உடல்கள் மீட்பு!

  • February 19, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவின் தஹோ ஏரி அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமாகியிருந்த 09 பேரில் 08 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரின் உடலை தேடும் நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏரிக்கு அருகே 09 பெண்கள் மற்றும் 06 ஆண்கள் உள்ளடங்களாக 15 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்ட நிலையில் பனிச்சரிவில் சிக்கினர். அப்போது மீட்புக் குழுவினர் 05 பெண்கள் உள்ளடங்களாக 06 பேரை பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும் 09 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் அவர்களை […]

விளையாட்டு

ICC T20 World Cup 2028: 12 அணிகள் நேரடியாகத் தகுதி!

  • February 19, 2026
  • 0 Comments

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ICC T- 20 உலகக்கிண்ண தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 2028-ம் ஆண்டு ICC Men’s T20 World Cup தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. மேற்படி தொடருக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 இடங்கள் பிராந்திய தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகள் விபரம், 1. இங்கிலாந்து – England […]

ஐரோப்பா

48 மணிநேரம் அவகாசம் – தொழில்நுட்ப நிறுவனங்களை எச்சரிக்கும் பிரித்தானியா!

  • February 19, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள், முறைப்பாடு அளிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் இணையத்தில் ஒருமித்த கருத்து இல்லாத நெருக்கமான படங்களை அகற்றுவதை கட்டாயமாக்கும். இதை பின்பற்றத் தவறினால் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கணிசமான அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இங்கிலாந்தில் அவர்களின் சேவைகள் தடுக்கப்படலாம். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் லிஸ் கெண்டல் ( Liz Kendall) ஆகியோர் பெண்கள் […]

இந்தியா

AI மாநாட்டில் பில் கேட்ஸின் உரை ரத்து: பின்னணி என்ன?

  • February 19, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு AI தாக்க உச்சி மாநாட்டில் ஆற்றவிருந்த முக்கிய உரையை பில் கேட்ஸ் Bill Gates இரத்து செய்துள்ளார். இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், கேட்ஸ் அறக்கட்டளை Gates Foundation விசேட அறிக்கையொன்றின் ஊடாக விளக்கமளித்துள்ளது. “ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார். மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுகாதாரம் […]

error: Content is protected !!