இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பல நூற்றாச்டுகள் பழைமை வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட திருக்கோவிலாகும், இந்தக் கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்காக கடந்த சில நாட்களாக யாகசாலைப் பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்தக் கோவிலின் குடமுழுக்கிற்காக, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை […]













