இந்தியா

கேரளாவில் அரங்கேறிய சோகம்; மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி!

  • April 25, 2023
  • 0 Comments

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மோசமான மின்கலம் காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. தற்காலத்தில் […]

இலங்கை

இலங்கைக்கு 350 மில்லியன் டெலர்களை கடனாக வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • April 25, 2023
  • 0 Comments

பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆசிய ஆபிவிருத்தி வங்கி 350 மில்லியன் டொலர்கள், 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவிகளை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியின் கீழ்  இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதற்கமைய குறித்த கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு […]

வட அமெரிக்கா

டெக்ஸஸில் நாக்கு துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகள்;நீடிக்கும் மர்மம் !

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. டெக்ஸஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், முகம் சிதைக்கப்பட்ட பசு மாடுகளில் ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிசஸார் குறிப்பிட்டுள்ளனர். மேடிசன் கவுண்டி பகுதியில் 6 வயதான பசு மாடு ஒன்று இவ்வாறு முகம் […]

இலங்கை

ஹப்புத்தளையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

  • April 25, 2023
  • 0 Comments

ஹப்புத்தளை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்பேதன்ன மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் இவ்வாறு ஹப்புத்தளை பங்கெட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும்  வீட்டிலிருந்தபோதே  மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  42,  21 மற்றும் 17 வயதுடைய மூவரே மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

அணு ஆயுத சோதனை தொடர்பில் மேற்கு நாடுகளின் பார்வை பற்றி கவலையில்லை; ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம்

  • April 25, 2023
  • 0 Comments

ரஷ்யா, பெலாரஸில் அணுகுண்டுகளை நிலைநிறுத்துவதை மேற்கு நாடு எவ்வாறு பார்க்கிறது, என்பதை பற்றி ரஷ்யா பொருட்படுத்தவில்லை என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா, பெலாரஸில் தந்திரோபாய அணு ஏவுகணைகளை நிலைநிறுத்த மேற்கு நாடுகள் என்ன நினைக்கின்றன, என்பதை பற்றி மாஸ்கோ பொருட்படுத்தவில்லை என்று மூத்த ரஷ்ய தூதர் ரஷ்ய ஊடகமான TASS க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதப் பரவல் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் விளாடிமிர் யெர்மகோவ் […]

இலங்கை

சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை!

  • April 25, 2023
  • 0 Comments

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  தெரிவித்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் சூடானில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை கேட்டுக்கொள்கின்றோம். சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு முன்னுரிமை வழங்குவதே சாத்தியமான நிரந்தரமான தீர்வு என தெரிவித்துள்ள அலிசப்ரி சூடான் மக்களிற்கு அமைதி சமாதானம் ஸ்திரதன்மை முன்னேற்றம் போன்றவை கிட்டவேண்டும், சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு..!

  • April 25, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளது. ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது. அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது. பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு இல்லை […]

இலங்கை

பயங்கரவாத திருத்தச் சட்டமூலத்தில் முன்மொழிகளை ஏற்க தயார் – பந்துல குணவர்த்தன!

  • April 25, 2023
  • 0 Comments

மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துதற்கான நோக்கமாகும். அதில் பொறுத்தமான திருத்த முன்மொழிவுகளை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளது என  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச […]

ஆசியா

வடமேற்கு பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 8 பேர் படுகாயம்!

  • April 25, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில், 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் […]

இலங்கை

கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்! கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

  • April 25, 2023
  • 0 Comments

கொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று ‘குஷ்’ என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் […]

error: Content is protected !!