இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம்

  • December 21, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின்((Uttar Pradesh) பரேலி-பிலிபிட்(Bareilly-Pilipit) நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். ஹபீஸ்கஞ்ச்(Hafizganj) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சித்ரா(Chitra) கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​நவாப்கஞ்ச்(Nawabganj) பக்கத்திலிருந்து வந்த லாரி, அவர்களின் பைக் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது பிரேம்பால்(Prempal) மற்றும் 17 வயது சுனில் குமார்(Sunil […]

செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

  • December 21, 2025
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில்(Dubai) நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில்(United Arab Emirates) நடைபெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில், அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ்(Sameer […]

ஐரோப்பா செய்தி

மியாமியில் (Miami) இடம்பெறும் அமைதி பேச்சுவார்த்தை – உக்ரைனின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமா?

  • December 21, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மியாமியில் (Miami) ஆக்கபூர்வமாக நடந்து வருவதாக புடினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)  ஐரோப்பிய பங்காளிகளுடன் பரந்த ஆலோசனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. உக்ரைன் ஜனாதிபதி , போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்க ஜனாதிபதி தீவிர பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைதியை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ஆற்றலையும் […]

ஐரோப்பா செய்தி

UKவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

  • December 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டில்  சராசரியாக £436 பவுண்ட்ஸை வட்டியாக பெறுவார்கள் என நேஷன்வைட் பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. கட்டிட சங்கம் (biggest building society) நடத்திய சமீபத்திய ஆய்வில், நாட்டில் உள்ள பெரியவர்கள் வரும் ஆண்டில் சராசரியாக £7,535 பவுண்ட்ஸ் சேமிப்பார்கள் எனக் கண்டறிந்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக மக்களின் சேமிப்பு விருப்பங்களை அளவிடுவதற்காக இங்கிலாந்து முழுவதும் 2,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து […]

ஐரோப்பா செய்தி

அடுத்த கிறிஸ்துமஸுக்கும் ஸ்டார்மரே பிரதமர் – ட்ரெவர் பிலிப்ஸ்

  • December 21, 2025
  • 0 Comments

அடுத்த கிறிஸ்துமஸுக்கும் கெய் ஸ்டார்மரே (Keir Starmer) பிரதமராக இருப்பார் என சமூக மற்றம் சமத்துவ நிபுணர் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல கடினமான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் பிலிப்ஸ் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது மக்கள் மீட்சியைக் காணத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் கடந்த ஆண்டு வாக்களித்த மாற்றத்தின் நன்மைகளை புதிய ஆண்டில், உணர்வார்கள் என்றும் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார். அவர் தொழிற் கட்சியின் அன்னா […]

இந்தியா செய்தி

டெல்லியில் கடும் பனிமூட்டம் – விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 110 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளன. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலவி வரும் நிலையில் வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காட்சி தெளிவின்மையை உருவாக்குவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் அறிவிப்பில் […]

இலங்கை செய்தி

பேராதனை பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளி காரணமாக தடைபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் க நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, கால்நடை வைத்திய விஞ்ஞான பீடம், விவசாய பீடம் மற்றும் பல் மருத்துவ விஞ்ஞான பீடம் என்பன மீண்டும் திறக்கப்படும் என பல்லைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2026 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி விஞ்ஞானம் மற்றும் கலை பீடங்களை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் முகாமைத்துவ பீடத்தை மீண்டும் திறப்பது குறித்து […]

இலங்கை செய்தி

ஐந்து மீனவர்களுடன் மாயமான பல நாள் மீன்பிடிபடகு

  • December 21, 2025
  • 0 Comments

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று காணாமற் போயுள்ளது. ‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த படகில் ஐந்து மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு கடந்த கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அன்று முதல் இதுவரை […]

உலகம்

வங்கதேசத்தில் தீக்கிரையாக்கப்பட்ட அரசியல் தலைவரின் வீடு – சிறுமி பலி!

  • December 21, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவர் பெலால் ஹொசைனின் (Belal Hossain) வீட்டை,  ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் இரவு உணவிற்குப் பின்  படுக்கைக்குச் சென்ற பிறகு, வீட்டின் கதவுகள் வெளியில்  பூட்டப்பட்டிருந்ததாகவும், இன்று (21) அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெலால் ஹொசைனின் (Belal Hossain) ஏழு வயது மகள் உயிரிழந்துள்ளார். […]

அரசியல் ஐரோப்பா செய்தி

தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சி – பிரித்தானிய அரசாங்கத்தின் மீது பலரும் குற்றச்சாட்டு

  • December 21, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் 63 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள், விமர்சித்துள்ளனர். ஸ்கை நியூஸ் தகவலின்படி, 05 அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். சில தேர்தல்கள் ஏற்கனவே 2025 இல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் விஜய் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மேலும் சில தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட தேர்தல்கள், மிக அவசரமான சூழ்நிலைகளில் மட்டுமே ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாமதமான மாற்றங்கள் நிர்வாகிகளுக்கு உதவாது என்றும் கட்சிகள் மற்றும் […]

error: Content is protected !!