இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

திட்வா” புயல் எதிரொலி: இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை இடைநிறுத்த 120 நிபுணர்கள் அதிரடி கோரிக்கை

  • December 22, 2025
  • 0 Comments

“திட்வா” புயலால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் மற்றும் தோமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட பல சர்வதேச வல்லுநர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையின் உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கடன் […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் புது வியூகம்: சஜித், ரணில் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விரைவில் நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளிலும் உள்ள மூத்த உறுப்பினர்களின் தலையீட்டையடுத்தே நேரடி சந்திப்புக்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது. இணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரு கட்சிகளில் இருந்தும் பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்குழுக்கள் சந்தித்து […]

செய்தி விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

  • December 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 87.2 […]

உலகம் செய்தி

படகு விபத்தில் காணாமல் போன இரண்டு இந்தோனேசிய மீனவர்களின் உடல்கள் மீட்பு

  • December 21, 2025
  • 0 Comments

கடந்த வாரம் படகு விபத்தில் காணாமல் போன இரண்டு இந்தோனேசிய(Indonesia) மீனவர்களின் உடல்களை மீட்டதாக போர்த்துகீசிய((Portuguese) அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 14 அன்று போர்டோ(Porto) நகருக்கு வடக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது. போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ்(Spanish) விமானங்கள், கடல்சார் காவல்துறை மற்றும் உயிர்காக்கும் படகு குழுவினரின் உதவியுடன் காணாமல் போன மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு சடலங்களும் வியானா டோ காஸ்டெலோ(Viana do Castelo) மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய […]

உலகம் செய்தி

குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க சுவிஸ் உள்துறை அமைச்சர் பரிந்துரை

  • December 21, 2025
  • 0 Comments

சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சுவிட்சர்லாந்து(Switzerland) இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர்(Elisabeth Baum-Schneide) குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின்(Australia) 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து இதே போன்ற நடவடிக்கைகளை ஆராய வேண்டும் என்று பாம்-ஷ்னைடர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், சுவிஸ் மாகாணமான பிரிபெர்க்(Fribourg), 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்துவதைத் தடை செய்ய வாக்களித்தது. இது பாடசாலைகளில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க […]

இந்தியா செய்தி

பஞ்சாபின் 3 நகரங்களில் தடை செய்யப்பட்ட இறைச்சி, மது மற்றும் புகையிலை

  • December 21, 2025
  • 0 Comments

பஞ்சாபில்(Punjab) அமிர்தசரஸ் சுவர் நகரம்(walled city of Amritsar), தல்வண்டி சபோ(Talwandi Sabo) மற்றும் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்(Sri Anandpur Sahib) ஆகிய இடங்களில் இறைச்சி, புகையிலை, மது மற்றும் பிற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களிடையே மிகுந்த மரியாதைக்குரிய இந்த மூன்று இடங்களுக்கு புனித நகர அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் சிங் மான்(Bhagwant Singh Mann) குறிப்பிட்டுள்ளார். “உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் எந்த சிரமத்தையும் […]

உலகம் செய்தி

ஜெருசலேமில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸ் தலைவர்களை சந்திக்கும் நெதன்யாகு

  • December 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu), ஜெருசலேமில்(Jerusalem) கிரேக்க(Greek) பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ்(Kyriakos Mitsotakis) மற்றும் சைப்ரஸ்(Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ்(Nikos Christodoulides) ஆகியோரை சந்திக்க உள்ளார் என்று இஸ்ரேலின் அருட்ஸ் ஷேவா(Arutz Sheva) ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரு தலைவர்களுடனும் தனி தனி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். துருக்கியின்(Turkey) விரிவடைந்து வரும் இராணுவ நிலைப்பாடு குறித்து ஏதென்ஸில்(Athens) அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், கிழக்கு மத்தியதரைக் […]

செய்தி

பொறுப்புகளை நிறைவேற்றினாலே நாடு முன்னேறும்: ஜனாதிபதி உரை

  • December 21, 2025
  • 0 Comments

தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு இக்கட்டான சூழ்நிலைகளில் இராணுவம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் பணிகள் மகத்தானவை சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிக்கிறேன் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் […]

இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் 4 வயது மகனை கொன்ற நபர்

  • December 21, 2025
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தில்(Uttar Pradesh) குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது நான்கு வயது மகனை அடித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சூரியவான்(Suriyawan) பகுதியில் உள்ள குவாலி(Kuvali) கிராமத்தில் இரவு இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராம்ஜி வான்வாசி(Ramji Vanvasi) குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தூங்கிக் கொண்டிருந்த தனது 4 வயது மகன் விகாஸை(Vikas) தூக்கி பல முறை தரையில் அடித்து தப்பி ஓடிவிட்டதாகவும் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து நபர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

  • December 21, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் விரைவு நடவடிக்கை பட்டாலியன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, மைமென்சிங்(Mymensingh) நகரில் கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி 25 வயதான திபு சந்திர தாஸ்(Thibu Chandra Das) ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். காவல்துறையின் கூற்றுப்படி, தொழிற்சாலை ஊழியரான திபு சந்திர […]

error: Content is protected !!