இஸ்ரேலின் செயலால் சோமாலியா முழுவதும் வெடித்த போராட்டங்கள்
சோமாலிலாந்தை இஸ்ரேல் உலகளவில் முதன்முறையாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து, சோமாலியா முழுவதும் பரவலான போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் மொகடிஷு (Mogadishu) உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மொகடிஷுவின் முக்கிய கால்பந்து மைதானம் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை,மக்கள் திரண்டனர். போராட்டக்காரர்கள் சோமாலிய கொடிகளை ஏந்தியும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பினர். பைடோவா, துசமரெப், லாஸ் அனோட், ஹோபியோ உள்ளிட்ட நகரங்களிலும், நாட்டின் வடகிழக்கு […]













