இலங்கை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கைகொடுக்கும் கிரிக்கெட்; பாகிஸ்தான் தொடர் மூலம் நிதி சேகரிப்பு

  • December 31, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கும் முழு வருமானத்தையும், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. ‘டித்வா’ (Ditwah) புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீட்பு மற்றும் புனர்வாழ்வுப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் தொடரின் போது #VisitSriLanka எனும் விசேட ஹேஷ்டேக் (Hashtag) பிரசாரத்தையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு […]

ஐரோப்பா செய்தி

புத்தாண்டு- பிரித்தானியாவின் வானிலை முன்எச்சரிக்கை

  • December 31, 2025
  • 0 Comments

புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் குளிர்ந்த மற்றும் பனிப்பொழிவான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 02 ஆம் திகதியன்று நள்ளிரவு முதல் நண்பகல் வரை மஞ்சள் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து முழுவதும் பனிக்கட்டியும் பனிப்பொழிவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் மற்றும் எடின்பர்க்கில் புத்தாண்டு வாணவேடிக்கைகளை காணச் செல்லும் மக்கள், பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளை பெற்றுக்கொள்கையில் பயண நேரம் […]

உலகம் செய்தி வணிகம்

அமெரிக்கப் பங்குச்சந்தையில் வரலாற்றுச் சாதனை

  • December 31, 2025
  • 0 Comments

அமெரிக்கப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 2025-ஆம் ஆண்டை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் நிறைவு செய்துள்ளனர். ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக வரி (Tariff) கொள்கைகளால் சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்ட போதிலும், ஆண்டிறுதியில் S&P 500 குறியீடு சுமார் 17 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் அபரிமிதமான ஆர்வம் காரணமாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. இருப்பினும், 2026-ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்ததாக இருக்கும் […]

அரசியல் இலங்கை செய்தி

ஓடவும் மாட்டேன்: ஒளியவும் மாட்டேன்! சிறைவாசம் குறித்து நாமல் கருத்து!

  • December 31, 2025
  • 0 Comments

“தமது தேவைக்கேற்ப சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை பார்வையிடுவதற்காக சென்று வரும் வழியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாம் பொலிஸாரைக் கண்டு ஓடி ஒளியமாட்டோம். உரிய வகையில் அறிவித்தல் […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் பாரம்பரிய சடங்கில் ஈடுபட்ட 41 இளைஞர்கள் உயிரிழப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறும் பாரம்பரிய சடங்குகளில் ஈடுபட்ட குறைந்தது 41 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராம்பரிய கலாச்சாரத்தின்படி, ஆண் விருத்த சேதனம் செய்யும் சடங்கில் கலந்துகொண்ட இளைஞர்களே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர்கள் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரங்களைப் பின்பற்றத் தவறியமையால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் பலத்த பாதுகாப்புடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

  • December 31, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி ஹனுக்கா திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிட்னி நகரம் மிக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்றுள்ளது. 15 பேர் பலியான அந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, 2,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் சிட்னி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நவீன ரகத் துப்பாக்கிகளுடன் பொலிஸார் ரோந்து செல்வது ஆஸ்திரேலியாவில் ஒரு அரிய காட்சியாக இருந்தது. நேற்று நள்ளிரவு 11 மணிக்கு, தாக்குதலில் உயிரிழந்தவர்களை […]

ஐரோப்பா செய்தி

ரயில் சேவைகள் கிடைக்காது- இங்கிலாந்து,ஸ்கொட்லாந்து பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

  • December 31, 2025
  • 0 Comments

புத்தாண்டின் முதல் வாரத்தில் முக்கிய பொறியியல் பணிகள் காரணமாக, எல்லை தாண்டிய ரயில் சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லாக்கர்பி (Lockerbie) மற்றும் கார்லைல் (Carlisle) இடையேயான மேற்கு கடற்கரை பிரதான ரயில் பாதை புத்தாண்டு தினத்திலிருந்து ஆறு நாட்களுக்கு மூடப்படும் என நெட்வொர்க் ரயில் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், இரண்டு நிலையங்களுக்கும் இடையே பயணிகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதை மூடப்படும் காலப்பகுதியில் கார்லைல் […]

உலகம் செய்தி

மலர்ந்தது புத்தாண்டு – 2026 ஐ முதல் நாடாக வரவேற்றது கிரிபாட்டி

  • December 31, 2025
  • 0 Comments

உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட ஆரம்பித்துள்ளது. இலங்கை நேரப்படி, கிரிபாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறந்துள்ளது. அதாவது இலங்கையில் இன்று 31 மதியம் 3:30 க்கு கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது. அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி 2026 ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடுகிறது. கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் வசிக்கும் 600 க்கும் மேற்பட்ட மக்கள் 2026 […]

உலகம்

பெருவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து! ரயில் சேவைகள் பாதிப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

பெருவில் இரண்டு சுற்றுலா ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். கோரிவைராச்சினா (Qoriwayrachina ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில்,  ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, மச்சு பிச்சுவை (Machu Picchu) அருகிலுள்ள குஸ்கோ (Cuzco) நகரத்துடன் இணைக்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.  

அரசியல் இலங்கை செய்தி

தீய சக்திகளுக்கு அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை!

  • December 31, 2025
  • 0 Comments

“மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்த சக்தியும் தாக்கு பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயல்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அமைச்சர் லால்காந்த K. D. Lalkantha எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது. எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த சதி […]

error: Content is protected !!