அரசியல் இலங்கை செய்தி

சஜித்மீது சரமாரியாக விமர்சனக்கணைகள் தொடுக்கும் ரணிலின் சகா: சங்கமம் தடைபடுமா?

  • January 2, 2026
  • 0 Comments

“ இருப்பதற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன். எனவே, மீண்டும் அங்கு செல்வதற்குரிய திட்டம் எனக்கு இல்லை.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும Ajith Manapperuma தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி UNP ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஜித் மானப்பெரும, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் SJP இணைந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் […]

உலகம்

ட்ரம்புடன் சமரசத்திற்கு தயாராகும் மதுரோ : முதலீடு செய்யவும் அழைப்பு!

  • January 2, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருப்பதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தெரிவித்துள்ளார். நேற்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் ஒன்றின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பலவந்தம் மூலம் தங்களை அடிப்பணிய வைக்க முயற்சிப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். வெனிசுலா அமெரிக்க முதலீட்டிற்கு தயாராக உள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரைட்டன் அரண்மனை விற்பனைக்கு

  • January 2, 2026
  • 0 Comments

பிரைட்டன் பியர் குழுமம் (Brighton Pier Group) தனது 126 ஆண்டு பழமையான, Grade II* பட்டியலிடப்பட்ட அரண்மனையை சந்தையில் விற்பனைக்கு வைத்துள்ளது. பிரைட்டன் அரண்மனை என்பது இங்கிலாந்தின் பிரைட்டன் நகரில் உள்ள ராயல் பவிலியன் (Royal Pavilion) என்றழைக்கப்படும் முன்னாள் அரச மாளிகையைக் குறிக்கும். அதாவது, Grade II* பட்டியலிடப்பட்ட கப்பல்துறை “வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டது” என்று குறிக்கிறது. இதற்கான மாற்றங்கள் செய்ய அரசாங்க அனுமதி தேவைப்படும். குழு புதிய உரிமையாளர்களை கோடைக்காலத்திற்குள் […]

உலகம்

வெனிசுலாவை பழிவாங்க சீனா மீது கை வைத்த ட்ரம்ப்!

  • January 2, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி மீது  கட்டுப்பாடுகளை விதிக்க தவறியமைக்காக ஹொங்கொங் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதியை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்க கரூவூலத்துறை சீனாவிற்கு சொந்தமான நான்கு நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி விநியோகத்தில் மிகப் பெரிய வாடிக்கையாளராக சீனா காணப்படுகிறது. வெனிசுலாவின் வருமானத்தில் 95 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வெனிசுலா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் […]

அரசியல் இலங்கை செய்தி

புலி புராணத்தோடு புத்தாண்டில் அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. எனவே, சவால்களை கண்டு ஓடி ஒளியும் நபர் அவர் அல்லர்.” – இவ்வாறுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராமிய மட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. […]

இலங்கை

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57 சதவீதத்தால் உயரும் மின்கட்டணம்

  • January 2, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) இலங்கை மின்சார வாரியம் (CEB) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. குறித்த முன்மொழிவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% கட்டண அதிகரிப்பு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வீட்டு மின்சார நுகர்வோர் அனைத்து நுகர்வு தொகுதிகளிலும் யூனிட் கட்டணங்கள் மற்றும் நிலையான மாதாந்திர கட்டணங்கள் இரண்டிலும் அதிகரிப்பை எதிர்கொள்வார்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

சொந்த நாட்டுக்குள்ளேயே தாக்குதல் நடத்திய உக்ரைன் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்!

  • January 2, 2026
  • 0 Comments

கெர்சன் (Kherson) பிராந்தியத்தின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஆளுநர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கோர்லியில் (Khorly)  கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 20இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா (Maria Zakharova), உக்ரைன் […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்குரிய அரசியல் சமர் 5 ஆம் திகதி ஆரம்பம்!

  • January 2, 2026
  • 0 Comments

பிரதான அரசியல் கட்சிகள் 2026 ஆம் அண்டுக்கான தமது முதலாவது விசேட கூட்டங்களை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் 6 ஆம் திகதி கூடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் 5 அல்லது 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இது […]

உலகம்

நிம்மதியற்ற உறக்கம் – அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் ட்ரம்ப்!

  • January 2, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், தனது உடல்நலம் குறித்த கவலைகளை, குறிப்பாக காயமடைந்த கைகள் மற்றும் கணுக்கால் வீக்கம் குறித்து எடுத்துரைத்துள்ளார். அவர் தனது காயமடைந்த கைகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைத்ததைவிட  ஆஸ்பிரின் (325 மி.கி) டோஸை அதிகளவில்  எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். 79 வயதான ட்ரம்ப் கண்களை மூடும்போது கூட நிதானமாக இருப்பதாகவும், இரவில் தாமதமாக உதவியாளரை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அதிகளவிலான துரித உணவுகளை […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

  • January 2, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றம்கூடும்வேளை, பிரேரணை அங்கீகாரத்துக்காக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும். மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே மேற்படி தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது. முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் தமது அறிக்கையில் மேற்படி நாடாளுமன்ற […]

error: Content is protected !!