தேங்கிக் கிடக்கும் வழக்குகள் – பிரித்தானியாவில் தன்னார்வ நீதிபதிகளுக்கு அழைப்பு!
இங்கிலாந்து முழுவதும் நீதித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டுவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை விரைவுபடுத்த ஆயிரக்கணக்கான புதிய தன்னார்வ நீதிபதிகளை நியமிக்கும் நோக்கில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கிரவுன் (crown) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் தீர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 முதல் 2,000 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நீதி […]













