ஐரோப்பா

வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியதா பிரித்தானியா?

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான இராணுவத் தாக்குதல்களில் இங்கிலாந்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) கூறினார். அத்தகைய தாக்குதலுக்கு பிரிட்டன் எந்த இராணுவ ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கராகஸில் (Caracas) உள்ள இலக்குகளை குறிவைத்து அமெரிக்க தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,  அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களுக்கு மத்தியில் ஸ்டாமரின் கருத்துக்கள் வந்துள்ளன. தொடர்புடைய செய்தி  நிக்கோலஸ் மதுரோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்கா!     […]

செய்தி விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை – ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

  • January 3, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி சிக்கந்தர் ராசா(Sikandar Raza) பிரையன் பென்னட்(Brian Bennett) ரியான் பர்ல்(Ryan Pearl) கிரேம் க்ரீமர்(Graeme Creamer) பிராட்லி எவன்ஸ்(Bradley Evans) […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சென்று டக்ளஸை சந்தித்தார் நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை Douglas Devananda , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (03) சந்தித்துள்ளார். மஹர சிறைச்சாலைக்கு சென்றே டக்ளஸை சந்தித்து, நாமல் ராஜபக்ச நலம் விசாரித்துள்ளார் என சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, […]

உலகம் செய்தி

“ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன” : ட்ரம்ப்பை எச்சரித்த ஈரான்!

  • January 3, 2026
  • 0 Comments

அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா தலையிடும் என்ற டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கை “பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரானின் பொருளாதாரம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்கா மீட்கும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சியின் (Abbas Araghchi) கருத்துக்கள் வந்துள்ளன. தாக்குதல் நடந்தால் ஈரானின் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், “எங்கு குறிவைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்திருப்பதாகவும்” அராச்சி சுட்டிக்காட்டினார். அத்துடன் எல்லையில் அமெரிக்க […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!

  • January 3, 2026
  • 0 Comments

“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் […]

உலகம்

நிக்கோலஸ் மதுரோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்கா!

  • January 3, 2026
  • 0 Comments

அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது நியூயார்க்கில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், கோகோயின் இறக்குமதி, துப்பாக்கிகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான ஆயுதங்கள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருந்ததாக நிக்கோலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணைகள் நிறைவு பெற்றவுடன் அவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய செய்தி  அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – ட்ரம்பிடம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்பு!! கூட்டாக வலியுறுத்தும் மக்கள்!

  • January 3, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. உடனடி பொதுத் தேர்தலைக் கோரும் மனுவில் 65,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதை அடுத்து, மேற்படி வலியுறுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜுலை மாதம் தொழிற்கட்சி ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் விரைவான தேர்தல் கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட  மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். பண்டிகைக் காலத்திற்கு முன்பு குறித்த மனுவில் 10000 பேர் கையெழுத்திட்டிருந்த நிலையில், தற்போது 50000 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். வரும் ஜுன் மாதம் […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் “சலூன் கதவை” மூடிய நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

“எனது தந்தையின் காலத்தில் இருந்த சலூன் கதவு தற்போது மூடப்பட்டுவிட்டது. இனி கொள்கையுடன் ஒத்துப்போகின்றவர்களுக்கு மாத்திரமே கட்சி கதவு திறக்கப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாற்று கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குள் வளைத்துபோடப்பட்டனர். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் ரீதியில் கோலோச்சியது. மறுபுறத்தில் இது தொடர்பில் விமர்சனங்களும் எழுந்தன. கட்சி தாவும் அரசியல் கலாசாரத்துக்கு மஹிந்த களம் அமைத்துவிட்டார் எனவும் […]

உலகம்

அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ – ட்ரம்பிடம் அடிப்பணிந்த வெனிசுலா!

  • January 3, 2026
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) தாக்குதல்களுக்குப் பிறகு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறினார். துணை வெளியுறவுச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ் (Christopher Landau), “மதுரோ இறுதியாக தனது குற்றங்களுக்கு நீதியை எதிர்கொள்வார்” என்று கூறினார். வெனிசுலாவின் அரசாங்கம் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், அவர்களின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.  மேலும் நாங்கள் […]

பொழுதுபோக்கு

பிக்பொஸ் சீசன் 09 : இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் ( Red card) கொடுத்த விஜய்சேதுபதி!

  • January 3, 2026
  • 0 Comments

தென்னிந்திய சின்னத்திரையில் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  பிக்பொஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 09 சீசன்கள் ஒளிபரப்பட்டுள்ள நிலையில், மக்களின் வெறுப்பை அதிகளவு சம்பாதித்த ஒரு சீசனாக இந்த சீசன் காணப்படுகிறது. குறிப்பாக இந்த சீசனில் போட்டியாளர்களாக வலம் வரும் வி.ஜே.பார்வதி மற்றும் கம்ரூதீன் ஆகியோர் அதிகளவில் வெறுப்பை பெற்றுக்கொண்ட போட்டியாளர்களாக காணப்படுகின்றனர். காதல் என்ற பெயரில் இவர்கள் நடந்துகொண்ட விதம் முகம்சுழிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற சீசன்களில் முதல் முறையாக […]

error: Content is protected !!