இலங்கை செய்தி

சுற்றுலாத்துறையில் உச்சம் தொட்டது இலங்கை: அமைச்சர் பெருமிதம்!

  • January 5, 2026
  • 0 Comments

சுற்றுலாப் பயணிகளின் வருகைமூலம் கடந்த வருடம் 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று (5) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். “ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாக இலங்கைக்கு அதிகளவு அந்திய செலாவணி கிடைக்கப்பெறுகின்றது. அந்தவகையில் இலங்கை வரலாற்றில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டு பதிவானது. 23 லட்சத்து […]

இலங்கை செய்தி

தையிட்டி வழக்கு ஒத்திவைப்பு

  • January 5, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராடியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

ஐரோப்பா

வரி விதிப்பு – UKவில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!

  • January 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு Vat வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன பாடசாலைகள் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜூலி ராபின்சன் (Julie Robinson), இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 105  தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தார். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த செயற்திட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பொது மற்றும் நகராட்சித் தொழிற்சங்கத்தில் மீண்டும் தலைமைத்துவப் போர்

  • January 5, 2026
  • 0 Comments

பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் முக்கிய நிதியுதவி அமைப்பான பொது மற்றும் நகராட்சித் தொழிற்சங்கத்தின் (General and Municipal Workers Union) தலைமைப்பீடத்தில் ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பொதுச்செயலாளர் தேர்தலில் தற்போதைய தலைவர் கேரி ஸ்மித் (Gary Smith) மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு எதிராக இரண்டு மூத்த பெண் அதிகாரிகள் கடுமையான புகார்களைச் சுமத்தியுள்ளனர். இதில் ஒருவர் இனவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தாம் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

குயின்ஸ்லாந்தில் ‘டேனியல் சட்டம்’ அமுல்

  • January 5, 2026
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘டேனியல் சட்டம்’ இன்று முதல் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய பொதுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட சிறுவன் டேனியல் மோர்கோம்பின் (Daniel Morcombe) பெற்றோரது நீண்டகால போராட்டத்தின் விளைவாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் மூலம், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் உங்கள் பகுதியில் வசிக்கும் அதிக […]

இலங்கை

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி பதவியேற்பு!!

  • January 5, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி)  ஜெ. ஸ்ரீபதி  இன்று (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு (காணி) வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 […]

அரசியல் இலங்கை செய்தி

பதவி விலகுவாரா பிரதமர்? வெளியானது அறிவிப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  Dr. Harini Amarasuriya பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர Devananda Suraweera தெரிவித்தார். கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டுக்கு, […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

வெடுக்குநாறிமலை நிலத்தை விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு அவசர கடிதம்

  • January 5, 2026
  • 0 Comments

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் பாதையை உடனடியாக விடுவித்துத் தருமாறு வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் இன்று ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். வரலாற்றுத் தொன்மை மிக்க இந்த ஆலயத்தின் வழிபாட்டுச் செயற்பாடுகளுக்காக, ஒரு ஏக்கர் காணியினை விடுவித்துத் தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

ஐரோப்பா

போலித் தகவல்கள் – 03 வயதிற்கு உட்பட குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஐரோப்பிய நாடு!

  • January 5, 2026
  • 0 Comments

பின்லாந்தில் போலிச் செய்திகள் மற்றும் தகவல்களை கண்டறிவது தொடர்பில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. 03 வயதுக்குட்பட்ட  குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த நீண்டகால கல்வி அணுகுமுறை, ஊடகங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் தவறான தகவல்களை அடையாளம் காண்பதற்கும் மாணவர்கள் மத்தியில் அறிவு திறனை வளர்க்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், கல்வியாளர்கள் இப்போது தங்கள் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

error: Content is protected !!