உலகம் செய்தி

வெனிசுலாவில் பிப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையம்

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலோன் மாஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் அதிரடியாகக் கைது செய்து நியூயோர்க்கிற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அங்கு நிலவும் தகவல் தொடர்புக் குறைபாடுகளை நீக்க ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) மூலம் பிப்ரவரி 3-ஆம் திகதி வரை இலவச இணையம் வழங்கப்படும் என எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மதுரோவின் வெற்றிடத்தை நிரப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் துணை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

முடிவுக்கு வரும் எம்.பி.க்களின் ஓய்வூதியச் சலுகை ; புதிய சட்டமூலம் தயார்

  • January 4, 2026
  • 0 Comments

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை நீக்குவதற்காக, ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சலுகை, இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக இனிவரும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

  • January 4, 2026
  • 0 Comments

தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில் தகாத இணையதள முகவரி அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு, தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடத் தொகுதியில், வெளியார் சதி மூலம் இத்தளம் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் […]

செய்தி விளையாட்டு

ஒப்பந்தம் இருந்தும் விலக முடிவு ; சனத் ஜயசூரியவின் அதிரடித் தீர்மானம்

  • January 4, 2026
  • 0 Comments

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகப்போவதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ளார். தனது ஒப்பந்தக் காலம் மீதமிருந்த போதிலும், பதவியில் நீடிக்க விருப்பமில்லை என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். 2024 இல் முழுநேரப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற இவரது காலத்தில், இலங்கை அணி விளையாடிய 60 போட்டிகளில் 29 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் சனத் ஜயசூரியவின் விலகல், இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் […]

இலங்கை செய்தி

லிந்துலையில் 24 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா

  • January 4, 2026
  • 0 Comments

லிந்துலை ஹோல்றீம் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கான 24 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு மண்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலிக கொட்டகைகளில் வசித்து வந்த குடும்பங்களுக்காக இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், தலா 32 இலட்சம் ரூபாய் செலவில் 10 பேர்ச்சஸ் காணிப் பரப்பில் ஒவ்வொரு வீடும் அமையவுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரைக்கு அமைய, இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை மற்றும் […]

இலங்கை

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பு : அமெரிக்காவின் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  “அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்,” எனவும் கூறியுள்ளார். இருப்பினும், வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வெனிசுலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். “மாறாக, […]

இலங்கை

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் : கட்டுநாயக்காவில் கைது!

  • January 4, 2026
  • 0 Comments

40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 1.163 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் அவரின் உடமைகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் காவலில் எடுத்து  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை செய்தி

புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

  • January 4, 2026
  • 0 Comments

இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் தனது உற்பத்தித் திறனை அதிகரித்து, இந்த ஆண்டில் பாரிய இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 10 புதிய மருந்து தயாரிப்புகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 4,000 மில்லியனாக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 70 வகையான மருந்துகளை உற்பத்தி செய்து வரும் இக்கூட்டுத்தாபனம், கடந்த 2025 ஆம் […]

இலங்கை செய்தி

புதிய உணவுப் பாதுகாப்பு விதிகள் ஜூலை முதல் அமுல்

  • January 4, 2026
  • 0 Comments

இலங்கையின் உணவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பல புதிய ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் திகதி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, உணவு லேபிளிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதல், திரவ உணவுகளில் சர்க்கரை மட்டத்தைக் குறிக்கும் நிறக் குறியீட்டு முறை, உப்பில் அயோடின் சேர்த்தல் மற்றும் ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans fats) தொடர்பான ஒழுங்குவிதிகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு […]

இலங்கை செய்தி

சதொச முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் விளக்கமறியலில்

  • January 4, 2026
  • 0 Comments

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ, சதொச லொறியைத் தனது தனியார் நிறுவனத் தேவைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்திக்க ரத்னமலல இன்று கைது செய்யப்பட்டார். […]

error: Content is protected !!