ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா நெருக்கமாக இணைவது ஏன் – மீண்டும் இணைவது சாத்தியமா?

  • January 4, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளுடன் நெருக்கமாக இணைவது நாட்டின் நலனுக்காக என பிரதமர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழக்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அமெரிக்கா மற்றும் இந்தியா உடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தங்களும் நாட்டின் நலனுக்காகவே உள்ளன, அதற்காக ஒற்றை சந்தையை சுங்க ஒன்றியத்திற்கு பதிலாக முன்னிலைப்படுத்துவது நல்லது. நெருக்கமான பொருளாதார தொடர்புகள் நமது நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை […]

செய்தி விளையாட்டு

டி20 உலகக் கோப்பை – வங்கதேச அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

  • January 4, 2026
  • 0 Comments

வங்கதேச(Bangladesh) இடைக்கால அரசாங்கம், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்கான இடத்தை மாற்றக் கோருமாறு அறிவுறுத்தியுள்ளது என்று விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல்(Asif Nasrul) தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு முறையாகத் தெரிவிக்கவும், போட்டியில் வங்கதேசத்தின் போட்டிகளுக்கான மாற்று இடமாக இலங்கையை முன்மொழியவும் இடைக்கால அரசாங்கம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின்(Mustafizur Rahman) ஒப்பந்தத்தை ரத்து செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight […]

இலங்கை

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்ட எம்.ஏ. சுமந்திரன்!

  • January 4, 2026
  • 0 Comments

திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்றப் பகுதிக்கு (04) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினையும் பார்வையிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சுமந்திரனின் இந்த விஜயம் வந்துள்ளது. இதன்போது பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய கோகிலரமணியுடனும் கலந்துரையாடலிலும் சுமந்திரன் ஈடுபட்டார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற […]

gut-health-vs-protein-powder-tamil-traditional-millet-diet செய்தி வாழ்வியல்

தசையை விட குடலே முக்கியம்! புரோட்டீன் மோகத்தைக் குறைக்கும் தமிழரின் பாரம்பரியம்.

  • January 4, 2026
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த ‘அதிக புரோட்டீன்’ (High Protein) மோகம் மெல்ல மெல்லத் தணிந்து, மக்கள் மீண்டும் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் புதிய உணவுப் புரட்சியாக ‘குடல் ஆரோக்கியம்’ (Gut Health) உருவாகியுள்ளது. முக்கியமாக தசை வளர்ச்சியை விட ஆரோக்கியமே தற்போது அவசியமாகிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் புரோட்டீன் பவுடர்கள்(Protein powder) மற்றும் சப்ளிமெண்ட்கள் (Supplement) தான் ராஜாவாக இருந்தன. ஆனால், […]

தமிழ்நாடு

தமிழகத்தை சென்றடைந்த அமித் ஷா – திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தட

  • January 4, 2026
  • 0 Comments

தமிகழகத்தில் 02 நாள் பயணம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்தார் அங்கு அவருக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். அந்தமான் நிக்கோபர் போர்ட் பிளேயர் விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் பாதுகாப்புத்துறை அமைச்சக விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 2.56 க்கு திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நியாயமானதா?

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்துள்ள தாக்குதல் நடவடிக்கை உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின்  ஜனாதிபதியான நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு தற்போது குற்றவியல் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் உலக நாடுகள் பல அமெரிக்காவின் தாக்குதலை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்றும், இது தொடர்ந்தால் எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்,” என்ற நிலை உருவாகும் எனவும் உலக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். […]

இந்தியா இலங்கை செய்தி

இந்திய இராணுவத் தளபதி நாளை இலங்கை விஜயம்!

  • January 4, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi மூன்று நாட்கள் பயணமாக நாளை (05) இலங்கை வருகின்றார். இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படவுள்ளது. இந்திய இராணுவத் தளபதியுடன் மேலும் சில உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளனர். 8 ஆம் திகதிவரை அவர்கள் நாட்டில் தங்கி இருப்பார்கள். இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. […]

#CryptoTax #Cryptocurrency #Bitcoin #TaxRules #OECD #FinTech #CryptoNewsTamil #கிரிப்டோ #வரி #நிதிச்செய்திகள் அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கிரிப்டோவுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி! 48 நாடுகளின் அதிரடி ஒப்பந்தம்.

  • January 4, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகள் (Cryptocurrency exchange) மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வர்த்தக விவரங்களை அந்தந்த நாட்டு வரி அதிகாரிகளிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) உருவாக்கிய கிரிப்டோ சொத்து அறிக்கை கட்டமைப்பு (CARF – Cryptoasset Reporting Framework) என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய […]

அரசியல் செய்தி

வெனிசுலாமீதான இராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறது ஜே.வி.பி.!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்குள் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி. (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக்கட்சியே ஜே.வி.பியாகும். வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் அக்கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டினை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டினை போன்றே வெனிசுலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் […]

ஐரோப்பா செய்தி

மதுரோ சட்டவிரோத ஜனாதிபதி – பிரித்தானியா அறிவிப்பு

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பிரித்தானியா சட்டவிரோத ஜனாதிபதியாக கருதுகின்றதென பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது ஆட்சியின் முடிவு குறித்து வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் வெனிசுலா மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நோக்கம் என்றும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார். இதேவேளை, வெனிசுலாவில் உள்ள சுமார் 500 பிரித்தானிய குடிமக்களின் […]

error: Content is protected !!