திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி பதவியேற்பு!!
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி) ஜெ. ஸ்ரீபதி இன்று (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு (காணி) வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 […]













