ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் தீவிபத்தை ஏற்படுத்தும் மெழுகுவர்த்திகளுக்கு தடை!

  • January 6, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தை தொடர்ந்து அனைத்து ஸ்பார்க்லர்  மெழுகுவர்த்திகளும் (sparkler candles) தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரான்ஸ்-மொன்டானா மேயர் நிக்கோலஸ் ஃபெராட் ( Nicolas Feraud) மேற்படி தகவலை வெளியிட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2020 – 2025 ஆம் ஆண்டுக்கு இடையில் மதுபான விடுதிகளில் தீவிபத்து தொடர்பில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இனி ஒவ்வொரு வருடமும் தீவிபத்து ஏற்படுமா என்பது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

  • January 6, 2026
  • 0 Comments

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி […]

உலகம்

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு – துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி!

  • January 6, 2026
  • 0 Comments

நேபாளத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்து மற்றும் இஸ்லாமிய குழுக்களுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் யாரும் தெருக்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அனைத்து கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்தை மீறுபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 130 கிலோமீட்டர் (80 மைல்) […]

#Ethirneechal #EthirNeechalSerial #Janani #Mathivathini #SunTV #TamilSerial #Rana #SriLankanTamil #Eelam #TamilCinema #TrendingNow #SerialUpdate #EthirNeechalJanani செய்தி பொழுதுபோக்கு

ஈழத்து பின்னணியுடன் அதிரும் ‘எதிர்நீச்சல்’ களம்!

  • January 6, 2026
  • 0 Comments

சன் டிவியின் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ மெகாத் தொடரில், கலெக்டர் மதிவதினியின் கடந்த கால வாழ்க்கை குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் பிரபல மெகாத் தொடரான ‘எதிர்நீச்சல்’ தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கலெக்டர் மதிவதினியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனனியிடம் தனது கடந்த காலத்தை பகிர்ந்துகொண்ட மதிவதினி, தான் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்ற உண்மையை உடைத்துள்ளார். ஈழப் போராட்ட சூழலில் தனது ஒட்டுமொத்த […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – 134 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி

  • January 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சிட்னி(Sydney) மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 384 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில், ஜோ ரூட்(Joe Root) 160 ஓட்டங்களும் ஹரி புரூக்(Harry Brook) 80 ஓட்டங்களும் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பொலிஸ் அராஜகமா? சபையில் சிறிதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்!

  • January 6, 2026
  • 0 Comments

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் Ramalingam Chandrasekhar , நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் S. Siridharan இடையில் சபையில் Parliament இன்று சொற்போர் மூண்டது. நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுவதாக சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதை அதற்கு உதாரணம் காட்டினார். அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் NPP அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார். இதற்கு தனது உரையின்போது அமைச்சர் சந்திரசேகர் பதிலடி கொடுத்தார். “ வடக்கில் […]

ஐரோப்பா

உறைபனி நிலை – பிரான்ஸில் 05 பேர் உயிரிழப்பு!

  • January 6, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் சில பகுதிகளை இன்று உறைபனி தாக்கியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் பனியில் சிக்கி 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சின் லேண்டஸ் (Landes) பகுதியில் 03 பேரும்,  பாரிஸைச் சுற்றியுள்ள இல்-டி-பிரான்ஸ் (Île-de-France)  பகுதியில் குறைந்தது இரண்டு பேரும்  உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடுமையான பனிப்பொழிவால் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கில் ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்புடைய செய்தி உறைபனி எச்சரிக்கை: பிரித்தானியாவில் இன்று 1,000 […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி முக்கிய செய்திகள்

கழுகுப் பார்வையில் கிரீன்லாந்து : வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ட்ரம்பின் அடுத்த இலக்காக கிரீன்லாந்து மாறியுள்ளது. நேட்டோ மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து தேவை என்று ட்ரம்ப் கூறிவருகிறார். அதனை விட்டு தராவிட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் அவர் மறுக்கவில்லை. ஆகவே அமெரிக்காவின் அடுத்த இலக்கு கிரீன்லாந்துதான் என்பது தெளிவாக தெரிகிறது. இதில் ட்ரம்பிற்கு பலம் சேர்க்கும் புதிய விடயம் என்னவென்றால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தாலும் தட்டிக் கேட்கக்கூடிய அளவிற்கு வேறு எந்த நாடுகளுக்கும் பலம்பொருந்தியதாக  இல்லை […]

உலகம் செய்தி

தெற்கு சிரியாவில் இஸ்ரேல் ஊடுருவல் – இறையாண்மையை மீறுவதாக சிரியா கண்டனம்

  • January 6, 2026
  • 0 Comments

தெற்கு சிரியாவின் குனைட்ரா (Quneitra) மாகாண கிராமப்புறத்தில் அமைந்துள்ள சைதா அல்-கோலன் ( Saida al-Golan) கிராமத்திற்குள் பன்னிரண்டு இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளதாக அல் ஜசீரா செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஊடுருவல், சிரியாவின் இறையாண்மையை மீறும் நடவடிக்கையாகும் என சிரிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்தியஸ்தத்தின் கீழ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிரிய பிரதிநிதிகள் குழு இஸ்ரேலிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக […]

இலங்கை செய்தி

மீனவர்களுக்கு எச்சரிக்கை – அடுத்த 24 மணித்தியாலங்களில் நடக்கப் போவது என்ன?

  • January 6, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை ஜனவரி 08ஆம் திகதியிலிருந்து மேலும் அதிகரிக்கும் […]

error: Content is protected !!