உலகம் செய்தி

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்த சிங்கப்பூருக்கான சவுதி அரேபியாவின் புதிய தூதர்

  • January 7, 2026
  • 0 Comments

சிங்கப்பூருக்கான(Singapore) சவுதி அரேபியாவின்(Saudi Arabia) புதிய தூதர் முகமது பின் அப்துல்லா அல்-காம்டி(Mohammed bin Abdullah Al-Khamdi) அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்திடம்(Tharman Shanmugaratnam) தனது நியமனப் பத்திரங்களை வழங்கி தனது பதவி காலத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார். இதன் போது ​​முகமது பின் அப்துல்லா அல்-காம்டி, சிங்கப்பூரின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான மன்னர் சல்மான்(Salman) மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின்(Mohammed bin Salman) வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரும் காலங்களில் பல்வேறு […]

இந்தியா செய்தி

குழந்தை வன்கொடுமை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த யூடியூபர் கைது

  • January 7, 2026
  • 0 Comments

இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை உருவாக்கி அதனை பதிவேற்றியதற்காக ஒரு யூடியூபர்(YouTuber) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கம்பெட்டி சத்ய மூர்த்தி(Kambeti Satya Murthy), ஹைதராபாத்(Hyderabad) காவல்துறையின் சைபர் கிரைம் அதிகாரிகளால் குழந்தை வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின்(Andhra Pradesh) விசாகப்பட்டினத்தைச்(Visakhapatnam) சேர்ந்த 39 வயதான மூர்த்தி, “வைரல் ஹப்”(Viral Hub) என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களுடன் நேர்காணல்களைக் கொண்ட வீடியோக்களைப் […]

#JanaNayagan #ThalapathyVijay #HCVerdict #CensorBoard #JanayaganRelease #KVNProductions #HVinoth #TVK #KollywoodNews #JanaNayaganUpdate இந்தியா பொழுதுபோக்கு

ரசிகர்கள் அதிர்ச்சி! ‘ஜனநாயகன்’ ரிலீஸில் நீடிக்கும் இழுபறி!

  • January 7, 2026
  • 0 Comments

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாகக் கூறி, கெவிஎன் தயாரிப்பு நிறுவனமான கெவிஎன் தயாரிப்பு நிறுவனம் (KVN Productions), சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கை இன்று (ஜனவரி 7) தாக்கல் செய்தது. […]

ஐரோப்பா செய்தி

மோசமான காலநிலை காரணமாக 700 விமானங்களை ரத்து செய்த ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம்

  • January 7, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின்(Europe) மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஆம்ஸ்டர்டாம்(Amsterdam) ஷிபோல்(Schiphol) விமான நிலையம், பனி மற்றும் காற்று காரணமாக 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இதனால், 1,000க்கும் மேற்பட்டோர் ஷிபோல் விமான நிலையத்தில் ஒரு இரவை கழித்துள்ளனர். மேலும், பயணிகளுக்கு முகாம் படுக்கைகளை அமைத்து காலை உணவை வழங்கியதாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டோங்கர்(Stefan Donger) தெரிவித்துள்ளார். இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் வானிலை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர், பிரான்சில்(France) […]

உலகம் செய்தி

பதவி விலகிய ஜப்பானின் முன்னாள் ஆளுநர் குறித்து விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

  • January 7, 2026
  • 0 Comments

பாலியல் துன்புறுத்தல் காரணமாக மத்திய ஜப்பானில்(Japan) முன்னாள் ஆளுநர் ஒருவர், ஊழியர்களுக்கு சுமார் 1,000 பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக வழக்கறிஞர்களின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் உள்ள ஃபுகுய்(Fukui) மாகாணத்தின் ஆளுநராக இரண்டாவது முறையாக பதவியேற்ற 63 வயதான டாட்சுஜி சுகிமோட்டோ(Tatsuji Sugimoto) பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், பதவி விலகலை தொடர்ந்து நடந்த விசாரணையில் “பாலியல் துன்புறுத்தலை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உள்ளது” என்று வழக்கறிஞர்கள் […]

#JayamRavi #RaviMohan #Kollywood #HandsomeActor #ViralPhotos #JayamRaviFans #ActorLife #LatestClicks புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இன்றும் மாறாத இளமை! ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜெயம் ரவியின் புதிய புகைப்படங்கள்!

  • January 7, 2026
  • 0 Comments

சமீபத்தில் ஒரு சிறப்புப் போட்டோஷூட்டில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, மிகவும் நேர்த்தியான உடையில் படு மாஸாகக் காட்சியளிக்கிறார். அவரது இந்த ‘புதிய அவதாரம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.”எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் இருக்கிறார்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியா செய்தி

விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • January 7, 2026
  • 0 Comments

திண்டுக்கல்(Dindigul) மாவட்டத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மதுரை(Madurai) விமான நிலையத்திற்குத் திரும்பும் போது ​​தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்(M.K. Stalin) பயணம் செய்த வாகனத்தின் டயர் வெடித்ததில் அவர் மிகப்பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் காயமின்றி உடனடியாக வேறொரு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் வேலுநாச்சியார்(Velunachiyar) வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சில பயனாளிகளுக்கு […]

உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வங்கதேசம்

  • January 7, 2026
  • 0 Comments

அரசு நடத்தும் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்(Biman Bangladesh Airlines) ஜனவரி 29 முதல் டாக்கா(Dhaka) மற்றும் கராச்சி(Karachi) இடையே நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இடைவிடாத விமான இணைப்பை மீண்டும் மீட்டெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “ஆரம்பத்தில் விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு டாக்காவில் இருந்து […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 129 ஓட்டங்கள் இலக்கு

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்ஷா(Salman Mirza) 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். […]

உலகம் முக்கிய செய்திகள்

ஒரே நேரத்தில் இரு பலம்பொருந்திய நாடுகளை பகைத்துக்கொள்ளும் அமெரிக்கா!

  • January 7, 2026
  • 0 Comments

வெனிசுலா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களை  அமெரிக்கா இன்று கைப்பற்றியுள்ளது. பனாமா கொடியுடன் பயணித்த சூப்பர் டேங்கர் எம் சோபியா (supertanker M Sophia) என்ற கப்பலையும், மரினேரா (Marinera)என்ற கப்பலையும் அமெரிக்க படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்படி சோபியா என்ற கப்பலானது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வெனிசுலாவில் இருந்து சீனாவிற்கு எண்ணெய் கொண்டுச்  சென்றதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே  மரினேரா (Marinera)என்ற கப்பல் ஈரானின் கச்சா எண்ணெயை சுமந்தப்படி ரஷ்யா நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. […]

error: Content is protected !!