உலகம்

கியூபாவை மிரட்டும் ட்ரம்ப் : ஒப்பந்தம் இல்லையேல் எண்ணெயும் இல்லை!

  • January 11, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபா ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் குறிப்பிடப்படாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இன்று தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், ஹவானாவிற்கு (Havana) எண்ணெய் விநியோகம் செய்வது இப்போது நிறுத்தப்படும் என  கூறியுள்ளார். நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்ட நேரத்தில் பெரும்பாலான கியூப பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கியூபா பல ஆண்டுகளாக வெனிசுலாவிலிருந்து அதிக […]

ஐரோப்பா

வாராந்திர இலக்கு வைத்து ஒரு மில்லியன் பவுண்டுகள் கொள்ளை! லண்டனில் சம்பவம்!

  • January 11, 2026
  • 0 Comments

லண்டனில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைத் திருடிய பல்கேரியக் கும்பல் தற்போது பிடிபட்டுள்ளது. பிரித்தானியாவின் ஹார்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும் லண்டன் பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளே இவர்களது இலக்கு. இவர்கள் ஒரு நிறுவனத்தைப் போலச் செயல்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் இவ்வளவு தங்கம் திருட வேண்டும் என்று தங்களுக்குத் தாங்களே இலக்கு (Weekly Gold Targets) நிர்ணயித்து, திட்டமிட்டு இந்தக் கொள்ளைகளை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை உருக்கி, அவற்றைச் சட்டவிரோதமாகப் பணமாக மாற்றியுள்ளனர். நீண்ட தேடுதல் […]

உலகம் செய்தி

ஈரானின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதாக ஜனாதிபதி பெஷேஷ்கியன் உறுதி

  • January 11, 2026
  • 0 Comments

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக தொடரும் வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு, நாட்டின் போராடும் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதாக ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உறுதியளித்துள்ளார். அரசு மக்களின் கருத்துகளை கேட்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், பெஷேஷ்கியன் சமரசமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நாட்டில் நிலவும் அமைதியின்மையைத் தூண்டுவதாக அவர் குற்றம் சுமத்தினார். பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க தனது அரசு உறுதியாக செயல்படும் என்றும் கூறினார். டிசம்பர் மாத […]

இலங்கை செய்தி

வடக்கு ரயில் மார்க்கத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

  • January 11, 2026
  • 0 Comments

இந்திய நிதியுதவியில் வடக்கு ரயில் மார்க்கத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. டிட்வா புயலால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் வடக்கு ரயில் மார்க்த்தின் பாதை பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்நிலையில் இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக 05 மில்லியன் […]

இலங்கை செய்தி

நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

  • January 11, 2026
  • 0 Comments

நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அத்துடன் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் […]

பொழுதுபோக்கு

“பராசக்தி” படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா?

  • January 11, 2026
  • 0 Comments

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் நேற்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு இரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குகள் முன்பு குவிந்த இரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். ‘பராசக்தி’ படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் இரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். முன்னதாக ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்த […]

ஐரோப்பா

அதிகரிக்கும் பதற்றங்கள் – கடல்கடந்த உறவுகளை வளர்க்கும் முயற்சியில் ஜேர்மனி!

  • January 11, 2026
  • 0 Comments

உலகளாவிய பதற்றங்கள் காரணமாக அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் (Johann Wadephul) கருத்துரைத்துள்ளார். ட்ரம்பின் சில சர்ச்சையான கொள்கைகள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ள  ஜோஹன் வடேபுல் (Johann Wadephul), அமெரிக்காவின் நீண்ட ஜனநாயக பாரம்பரியத்திற்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அதன் முயற்சிகளுக்கும் ஜெர்மனி நிறைய கடன்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார். “உலகளாவிய எழுச்சிகளுக்கு மத்தியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Grok AI சர்ச்சை, தவறை ஒப்புக்கொண்ட எக்ஸ் நிறுவனம்- 600 கணக்குகள் நீக்கம்

  • January 11, 2026
  • 0 Comments

எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம், தனது க்ரோக் ஏஐ (Grok AI)மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை  ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எக்ஸ் நிறுவனம் 600 கணக்குக்ளை முடக்கியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2 ஆம் திகதி எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய 72 மணி நேரக் கெடு இன்றுடன் முடியும் தருவாயில், க்ரோக் ஏஐ மூலம் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்த […]

இந்தியா செய்தி

இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் பிரச்சினை – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

  • January 11, 2026
  • 0 Comments

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதல்வர் என்ற […]

உலகம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம்!

  • January 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார்  300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் காட்டுத்தீ காரணமாக  அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்டோரியா மாநிலத்திற்கு  அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆபத்தை கருத்தில் கொண்டு ஏராளமான மக்களை  வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ இன்னும் […]

error: Content is protected !!