இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கான முதல் தாலிபான் தூதர் இந்தியா வருகை!

  • January 12, 2026
  • 0 Comments

தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முதல் தூதர்   தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக  இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபானின் மூத்த உறுப்பினரான முஃப்தி நூர் அகமது நூர் (Mufti Noor Ahmad Noor) ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திாயாவிற்கு வருகை தந்த அவர், தூதரகத்தில் இடம்பெறும் உள்விவகாரங்களை தொடர்ந்து உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நூர் முன்பு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் முதல் அரசியல் துறையின் […]

அரசியல் இந்தியா செய்தி

“கோ ஹோம் ஹரிணி”: போராட்டத்தில் குதித்தார் விமல்!

  • January 12, 2026
  • 0 Comments

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தை இன்று (12) Wimal Weerawansa ஆரம்பித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே அவர் போராட்டத்தில் குதித்துள்ளார். கொழும்பு, பத்தரமுல்ல, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்தில், விமலுக்கு ஆதரவாக அவரது கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். கோ ஹோம் ஹரிணி என்றெல்லாம் பதாகைகள் ஏந்தப்பட்டுள்ளன. புதிய கல்வி […]

உலகம்

ICE அதிகாரிகளை பாதுகாக்க கூடுதல் முகவர்களை அனுப்பிய ட்ரம்ப் நிர்வாகம்!

  • January 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் ICE அதிகாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் “நூற்றுக்கணக்கான” கூடுதல் கூட்டாட்சி சட்ட அமலாக்க முகவர்கள் மினசோட்டாவிற்கு (Minnesota) அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியேற்ற சோதனைகளின் போது இருக்கும் ICE மற்றும் எல்லை ரோந்துப் பணியாளர்களைப் பாதுகாக்க முகவர்கள் அனுப்பப்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் ( Kristi Noem) தெரிவித்துள்ளார். இதற்கிடையே மின்னியாபோலிஸ் (Minneapolis) மேயர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey),  ICE  முகவர்கள் […]

ஐரோப்பா

லண்டனில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் லண்டனில் கொலை குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த ஆண்டில் 97 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைநகரின் தனிநபர் கொலை விகிதம், 100,000 குடியிருப்பாளர்களுக்கு 1.1 ஆக உள்ளது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகரித்த கைதுகள், நேரடி முக அங்கீகாரம் போன்ற புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு எதிரான […]

இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரை காணியை விடுவிக்க மறுப்பா?

  • January 12, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க முடியாது என கூறப்பட்டதாகக் வெளியாகும் தகவலை அரசாங்கம் நிராகரித்துள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கொழும்பில் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது காணிகளை விடுவிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தரான அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரனிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “காணிகளை விடுவிக்க முடியாது என எவரும் கூறவில்லை. […]

ஐரோப்பா

பின்லாந்தில் உறைபனியுடன் கூடிய வானிலை – விமானங்கள் இரத்து!

  • January 12, 2026
  • 0 Comments

பின்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பனி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை விமான நிலையத்தில் வெப்பநிலை மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 34.6 டிகிரி பாரன்ஹீட்) குறைந்ததாகவும், இதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள பின்லாந்தின் கிட்டிலாவில் (Kittilä) ஆழ்ந்த உறைபனி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதிகளில் வெப்பநிலை -40 பாகை செல்சியஸாக பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து மக்கள் பொதுவாக உறைபனி குளிர்கால வெப்பநிலைக்கு பழக்கப்பட்டவர்கள்.  ஆனால்  […]

இந்தியா தமிழ்நாடு

சி.ஐ.பி. விசாரணைக்காக டெல்லி பறந்தார் விஜய்!

  • January 12, 2026
  • 0 Comments

சி.ஐ.பி. CIB விசாரணையை எதிர்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம்மூலம் டொல்லி நோக்கி பயணமானார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார். டெல்லி […]

ஆஸ்திரேலியா

மெல்பேர்னில் முஸ்லிம் சமூகத் தலைவருக்கு மிரட்டல்: விசாரணை தீவிரம்!

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் தென்கிழக்கு பகுதியில் இஸ்லாமிய சமூகத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இச்சம்;;பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத் தலைவரும், அவரது மனைவியும் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவொன்று அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. வாகனத்தை வழிமறித்து கீழ் இறக்கி, முஸ்லிம் விரோத சொற்பிரயோகங்கள் செய்யப்பட்டன என்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர். தமது காரை அந்த […]

இலங்கை செய்தி

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இந்;நிலைமையக் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் முதல் 12 நாட்களுக்குள் 2 ஆயிரத்து 17 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 41 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

வட இந்தியாவில் மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் நால்வர் மரணம் – 30 பேர் காயம்

  • January 11, 2026
  • 0 Comments

வட இந்தியாவின் சில பகுதிகளில் குளிர் தீவிரமடைந்தது பல பகுதிகள் அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டதனால் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். ஹோஷியார்பூர்-தசுயா(Hoshiarpur-Dasuya) சாலையில் ஒரு காரும் பேருந்தும் மோதியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மோசமான தெரிவுநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக சாலையில் வாகனங்களை ஓட்டும் […]

error: Content is protected !!