இலங்கை செய்தி

அநுர அரசுமீது தமிழர்களுக்கு நம்பிக்கை: ஆஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) உடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது மாகாணத்தின் பொருளாதாரம் குறித்தும் ஆளுநர் தெளிவுபடுத்தினார். ” வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகிய […]

உலகம்

அமெரிக்காவில் பாரிய ரயில் விபத்துகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாகத் தோல்வி!

  • January 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் மனித தவறுகள் மற்றும் தண்டாவள குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துகளில் 23 இறப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1,200 பேர் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தில் உள்ள ஹோவர்ட் (Howard) புலனாய்வு பத்திரிகை மையத்தின் பகுப்பாய்வில், இந்த தோல்விகளுக்குப் பின்னால் ஒரு சக்திவாய்ந்த துறை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கூட்டாட்சி ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பெரும்பாலும்  பாதுகாப்பு பரிந்துரைகளை  புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு சீர்திருத்தங்களை […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித்துக்கு ரணில் கொடுத்த “பிறந்தநாள் பரிசு” – தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்!

  • January 12, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு Sajith Premadasa , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்கு தமது பிரதிநிதிகளையும் அவர் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!

  • January 12, 2026
  • 0 Comments

டீசல் கார்கள் இல்லாத இங்கிலாந்தின் முதல் நகரமாக லண்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூ ஆட்டோமோட்டிவ் ( New AutoMotive) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030 முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையைத் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கணிப்பு வந்துள்ளது. இதற்கமைய தலைநகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எரிபொருள் விற்பனையை நிறுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 8,400 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல […]

இந்தியா செய்தி

விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  • January 12, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில கேள்விகளை கேட்பதற்காக நாளையும் அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப்பட்டது. அதில் 12 ஆம் திகதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. […]

இலங்கை செய்தி

அநுர அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியது சீனா: வெளிவிவகார அமைச்சர் கூறியது என்ன?

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு இன்று (12) பயணம் மேற்கொண்ட அவர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் Vijitha Herath இரு தரப்பு பேச்சில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டே சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை […]

இலங்கை செய்தி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி: மலையகத்தில் தொடரும் சோகம்!

  • January 12, 2026
  • 0 Comments

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். நுவரெலியா மாவட்டம் Nuwara Eliya , நானுஓயா Nanu Oya கிரிமிட்டி பகுதியிலேயே இன்று (12) இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கூட்டை கழுகு தாக்கிய நிலையில், கலைந்து வந்த குளவிகள் குறித்த பெண்ணை தாக்கியுள்ளன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 78 வயதான நடராஜா லெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உலகம்

ரோஹிங்கியா சிறுபான்மையினர் விவகாரம் – ஐ.நா நீதிமன்றத்தில் விசாரணை!

  • January 12, 2026
  • 0 Comments

ரோஹிங்கியா இன சிறுபான்மையினருக்கு எதிரான இனப்படுகொலைக்கு மியான்மர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2019 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா (Gambia) முதன்முதலில்   தொடர்புடைய வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது. இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்பித்த காம்பியா நீதி அமைச்சர் டவ்டா ஜாலோ ( Dawda Jallow), இராணுவ அரசாங்கத்துடனான தனது சொந்த அனுபவத்திற்குப் பிறகு “பொறுப்புணர்வின் காரணமாக” இந்த வழக்கைக் […]

இலங்கை

முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் பலி!

  • January 12, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு – பரந்தன் பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். பேருந்து ஒன்று கார் ஒன்றுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் 05 பேர் பயணித்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

கன்சர்வேடிலிருந்து விலகிய முன்னாள் நிதியமைச்சர் – ‘Reform UK’ வில் இணைந்தார்

  • January 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சர் நாதிம் சஹாவி ( Nadhim Zahawi ) , கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் Nigel Farage இன் ‘Reform UK’ கட்சியில் இணைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிரித்தானியா நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர் Nigel Farage பிரதமரானால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்” என கூறியுள்ளார். அதிகரித்து வரும் வரிகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் தனது இந்த […]

error: Content is protected !!