இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழுவதற்கு வழிகாட்டும் ஐ.நா.!

  • January 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தில் நேற்று (14) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டித்வா சூறாவளியின் தாக்கங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளன. அனர்த்தத்திற்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான விரிவான விளக்கத்தை ஐ.நா. UNDP அதிகாரிகள் […]

உலகம் செய்தி

தாய்லாந்து ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவு!

  • January 14, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் Thailand வடகிழக்கு பகுதியில் ரயில்மீது கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட பாரிய கிரேன் crane விழுந்ததில் குறைந்தபட்சம் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைக்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாங்காக்கிலிருந்து Bangkok 230 கிலோமீற்றல் தொலைவில் உள்ள, சீகியோ மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி இன்று புதன்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன், ஓடும் ரயில்மீது விழுந்துள்ளது. இதனையடுத்து ரயில் தடம் […]

இலங்கை

விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு!

  • January 14, 2026
  • 0 Comments

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று  பிடியாணை  பிறப்பித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இந்த  பிடியாணை  உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், பிரதிவாதியின் பிணை கையொப்பமிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்த குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது […]

உலகம்

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது விழுந்த கிரேன் : 22 பேர் பலி!

  • January 14, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 22 பேர்  உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகோன் ராட்சசிமா மாகாணத்தின் (Nakhon) சீக்கியோ (Sikhio) மாவட்டத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது மீட்பு பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. சீக்கியோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அதிவேக சாலை அமைக்கும் திட்டத்தில் இந்த கிரேன் பயன்படுத்தப்பட்டதாக […]

அரசியல் இலங்கை செய்தி

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்: மன்னிப்பு கோருமாறு அழுத்தம்!

  • January 14, 2026
  • 0 Comments

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கே.டி. லால்காந்தK.D. Lalkantha , உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசி அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு, “மிகிந்தலை தலைமை விகாராதிபதிமீது தரக்குறைவான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு அமைச்சர் லால்காந்த விமர்சித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மிகிந்தலை தேரருக்கு இருக்கின்றது. எனினும், குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொள்ள […]

இந்தியா

தொடர்கிறது “ஆபரேஷன் சிந்தூர்”: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.எனவே, பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” இவ்வாறு இந்திய இ ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 15 ஆம் திகதி இராணுவ தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் டெல்லியில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதன்போதே இந்திய இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, […]

உலகம்

ஊழியர் ஒருவரின் குற்றச்சாட்டு : நடுவிரலை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்!

  • January 14, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதாரண தொழிலாளி ஒருவரால் மோசமாக விமர்சிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளது. மிச்சிகனின் (Michigan) டியர்போர்னில் (Dearborn) உள்ள ஃபோர்டு தொழிற்சாலைக்கு( Ford factory) ட்ரம்ப் பயணித்திருந்தார். இந்நிலையில் அங்கு பணியாற்றும் டிஜே சபுலா ( TJ Sabula) என அடையாளம் காணப்பட்ட நபர், எப்ஸ்டீன் கோப்புகளை நிர்வாகம் கையாண்ட விதத்தைக் குறிப்பிட்டு ட்ரம்ப் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவதூறான வார்த்தையை […]

உலகம்

கனடா பிரதமர் சீனாவில் களமிறங்குவதன் பின்னணி என்ன?

  • January 14, 2026
  • 0 Comments

கனடா பிரதமர் மார்க் கார்னியின் Mark Carney சீன விஜயமானது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் தனது கழுகுப் பார்வையை செலுத்தியுள்ளது. சீனாவுடனான உறவை கட்டியெழுப்பும் நோக்கிலும், அமெரிக்காவுக்கு வெளியே சந்தை வாய்ப்பை பெறுவதற்குரிய சாத்தியப்பாடு குறித்து ஆராய்வதற்காகவுமே கனடா பிரதமர் பீஜிங் பறக்கின்றார். கனடா தமது நாட்டின் மாநிலமாக மாற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். அத்துடன், வர்த்தகப் போரையும் முடுக்கிவிட்டுள்ளார். எனவே, பொருளாதார ரீதியில் […]

ஐரோப்பா

NHS அறக்கட்டளையின் காலதாமதம் : அநியாயமாக பறிபோன உயிர்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  நோயாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து NHS அறக்கட்டளை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் சுகாதார ஆம்புட்ஸ்மேன் (ombudsman -குறைக்கேள் அதிகாரி) குறித்த நோயாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 2023 இல் இறுதியில் கருப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண் ஒருவர், நீண்ட நேர காத்திருப்பு காரணமாக கீமோதெரபி (chemotherapy) சிகிச்சையை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். இதன்காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது […]

உலகம்

“உடனடியாக வெளியேறுங்கள்” : ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

அமெரிக்க குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள அமெரிக்க மெய்நிகர் தூதரகம் நேற்றைய தினம் குறித்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் இப்போது ஈரானை விட்டு வெளியேற வேண்டும். பாதுகாப்பானதாக இருந்தால், ஈரானில் இருந்து துருக்கியே அல்லது ஆர்மீனியாவுக்கு தரைவழியாக புறப்படுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் வொஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்குமான பதற்ற […]

error: Content is protected !!